ஈய(II) ஐதராக்சைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II) ஐதராக்சைடு | |
| வேறு பெயர்கள்
ஈய ஐதராக்சைடு பிளம்பசு ஐதராக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 1319-46-6[2][3] | |
| ChemSpider | 8035300 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9859601 |
| |
| பண்புகள் | |
| Pb(OH)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 241.21 கிராம்/மோல் |
| தோற்றம் | வெண் தூள் |
| அடர்த்தி | 7.41 கிராம்/செ.மீ3 [4] |
| உருகுநிலை | 135 °C (275 °F; 408 K) (சிதைவடையும்) |
| 0.0155 கிராம்/100 மி.லி (20 °செல்சியசில்)[5] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
1.42 x 10−20 |
| கரைதிறன் | அமிலம் மற்றும் காரங்களில் கரையும்; அசிட்டோன் மற்றும் அசிட்டிக் அமிலம் போன்றவற்றில் கரையாது. |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஈய(II) ஐதராக்சைடு (Lead(II) hydroxide) என்பது , Pb(OH)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயத்தின் ஐதராக்சைடான இச்சேர்மத்தில் ஈயம் +2. என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. இந்த எளிய சேர்மம் இயற்கையில் இருப்பதற்கான வாய்ப்பு தொடர்பாக ஐயமே உள்ளது [6]. ஈய அடிப்படை கார்பனேட்டு (PbCO3•2Pb(OH)2) அல்லது ஈய(II) ஆக்சைடு (PbO) சேர்மங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன. கடந்த காலத்தில் இச்சேர்மங்களின் இருப்பும் ஈய(II) ஐதராக்சைடு இல்லாமை குறித்த குழப்பங்கள் நிலவின.
தயாரிப்பு
[தொகு]ஈய(II) உப்புடன் ஓர் ஐதராக்சைடை சேர்க்கும்போது ஒரு நீரேற்றம் பெற்ற ஈய ஆக்சைடு PbO•xH2O ( x < 1) கிடைக்கிறது. ஈய(II) அசிட்டேட்டை கரைசலை கவனத்துடன் நீராற்பகுத்து 6PbO•2H2O = Pb6O4(OH)4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக விளைப்பொருளை தயாரிக்கலாம் [7]. கொத்துச் சேர்மமாக கிடைக்கும் இதில் ஈய மையங்கள் எண்முகத்தில் காணப்படுகின்றன. இவற்றின் ஒவ்வொரு முகத்தின் உச்சியிலும் ஓர் ஆக்சைடு அல்லது ஓர் ஐதராக்சைடு காணப்படுகிறது. எண்முகக் கொத்தின் Mo6S8 கிளை அலகை நினைவூட்டுவதுபோல் இக்கட்டமைப்பு உள்ளது [8].
வினைகள்
[தொகு]கரைசல் நிலையில் ஈய(II) ஐதராக்சைடு கிட்டத்தட்ட ஒரு பலவீனமான அமில நிபந்தனைகளில் இது காரமாக Pb2+ அயனியை உருவாக்குகிறது. இந்த நேர்மின் அயனி நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. கார நிபந்தனைகள் விருத்தியடைகின்றன. Pb(OH)+, Pb(OH)2 , Pb(OH)3− இனங்கள் உள்ளிட்டவை உருவாகின்றன. மேலும் பலவணு இனங்களான Pb4(OH)44+, Pb3(OH)42+, Pb6O(OH)64+. போன்ற இனங்களும் உருவாகின்றன [7].
ஈய ஐதரேட்டு
[தொகு]கடந்த காலத்தில் ஈய நீரேற்று என்ற பெயர் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. ஆனால் இச்சொல் Pb(OH)2 அல்லது PbO•xH2O. என்பதில் எதைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது என்பதில் தெளிவில்லை [9][10].
மேற்கோள்கள்
[தொகு]- http://www.commonchemistry.org/ChemicalDetail.aspx?ref=1319-46-6&terms=lead(II)+hydroxide
- ↑ http://www.commonchemistry.org/ChemicalDetail.aspx?ref=1319-46-6&terms=lead(II)+hydroxide
- ↑ http://www.commonchemistry.org/ChemicalDetail.aspx?ref=1319-46-6&terms=lead(II)+hydroxide
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Handbook of Chemistry and Physics, 1st edition, 2000, CRC Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0740-6
- ↑ G. Todd and E. Parry (1964). "Character of Lead Hydroxide and Basic Lead Carbonate". Nature 202 (4930): 386–387. doi:10.1038/202386a0. https://archive.org/details/sim_nature-uk_1964-04-25_202_4930/page/386.
- 1 2 Von Egon Wiberg, Nils Wiberg, Arnold Frederick Holleman, "Inorganic Chemistry", Academic Press, 2001 (Google books).
- ↑ R. A. Howie; W. Moser (1968). "Structure of Tin(II) "Hydroxide" and Lead(II) "Hydroxide". Nature 219: 372–373. doi:10.1038/219372a0. https://archive.org/details/sim_nature-uk_1968-07-27_219_5152/page/372.
- ↑ http://www.google.com/patents/US527830
- ↑ http://www.google.com/patents/US496109