காரீய ஐதரசன் ஆர்சனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காரீய ஐதரசன் ஆர்சனேட்டு(Lead hydrogen arsenate), PbHAsO4 மூலக்கூற்று வாய்ப்பாட்டை  உடைய காரீய ஆர்சனேட்டு அல்லது அமில  காரீய ஆர்சனேட்டு எனவும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு கனிம பூச்சிக்கொல்லி ஆகும். முக்கியமாக இது உருளைக்கிழங்கு வண்டுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. 

வேதியியல்[தொகு]

இது வழக்கமாக பின்வரும் வினையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது:

Pb(NO3)2(aq) +H3AsO4(aq) → PbHAsO4(s) +2HNO3(aq)

காரீய ஆர்சனேட்டு மிகவும் பரந்துபட்ட அளவில் பயன்படும் ஆர்சனிக் பூச்சிக்கொல்லியாகும்.[1]  காரீய ஆர்சனேட்டின் இரண்டு வகையான ஆக்கங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன: கார காரீய ஆர்சனேட்டு (Pb5OH(AsO4)3, சிஏசு எண்: 1327-31-7) மற்றும் அமில காரீய ஆர்சனேட்டு (PbHAsO4, சிஏசு எண்: 7784-40-9).[1] 

1930கள்-1940கள் வரை, காரீய ஆர்சனேட்டு விவசாயிகளால் கரையக்கூடிய ஈய உப்புக்களுடன் சோடியம் ஆர்செனேட்டினை வினைப்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு வந்தது.

பயன்கள்[தொகு]

ஒரு பூச்சிக்கால்லியாக, இது முதலில் மாசச்சூசெட்ஸில் ஜிப்சி அந்துப்பூச்சிக்கு எதிராக அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த பாரிசு பச்சைக்குப் பதிலாக குறைவான கரைதிறன் மற்றும் குறைவான நச்சுத்தன்மை கொண்ட மாற்றாக பயன்படுத்தப்பட்டது. இது தாவரங்களின் புறப்பரப்பில் நன்றாக ஒட்டிக்கொள்ளும் பண்பையும், நீண்டகால அளவிற்கு நீடித்து வரும் தன்மையினாலும், மேம்பட்ட பூச்சிக்கொல்லித் தன்மமையைக் கொண்டதாக இருந்ததாலும் சிறப்பானதாக இருந்தது.

காரீய ஆர்செனேட்டு ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, மற்றும் பல பிற பகுதிகளில், அந்துப்பூச்சி இனத்திற்கு எதிராக பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. முக்கியமாக ஆப்பிள்கள், மற்ற பழ மரங்கள், தோட்டப் பயிர்கள்  தரைப்பகுதி புல்வகை ஆகியவற்றிலும் மற்றும் கொசுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கலிபோர்னியாவில்,  அம்மோனியம் சல்பேட்டுடன்  இணைத்து பயன்படுத்தப்படும் தெற்கு கலிபோர்னியாவில் புல்வெளிகளில் காணப்படும் நண்டு புல் விதைகளை அழிப்பதற்கான குளிர்கால சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.[சான்று தேவை]

கார காரீய ஆர்செனேட்டு கலிபோர்னியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தாவரங்களின் புறப்பரப்பைக் கழுவுவதோடு இது விளைபொருட்களில் தங்கி விடுவது கண்டறியப்பட்டதன் காரணமாக மாற்று பூச்சிக்கொல்லிக்கான தேடல் 1919 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்தது. 1947 ஆம் ஆண்டில் டிடிடீ கண்டுபிடிக்கப்படுவது வரை கண்டறியப்பட்ட மாற்றுப்பொருட்கள் குறைவான திறனுடடையவையாகவும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் அதிக நச்சுத்தன்மை உடையனவாகவும் இருந்தன. அமமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1960 களின் இடைப்பகுதி வரை காரீய ஆர்செனேட்டின் பயன்பாடு இருந்தது. ஆகஸ்ட் 1, 1988 அன்று அதிகாரப்பூர்வமாக பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுவதில் இருந்து தடை செய்யப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Peryea F.J. 1998. Historical use of lead arsenate insecticides, resulting in soil contamination and implications for soil remediation. Proceedings, 16th World Congress of Soil Science, Montpellier, France. 20-26. Aug. Available online: http://soils.tfrec.wsu.edu/leadhistory.htm

வெளி இணைப்புகள்[தொகு]