ஈயம்(II) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனிமச் சேர்மம்

ஈயம்(II) சல்பேட்டு
sample of lead(II) sulfate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈய(II) சல்பேட்டு
வேறு பெயர்கள்
ஆங்கிள்சைட்டு, வேக வெண்மை, பால் வெண்மை, பிளம்பஸ் சல்பேட்டு
இனங்காட்டிகள்
7446-14-2 Y
ChemSpider 19956579 Y
InChI
 • InChI=1S/H2O4S.Pb.4H/c1-5(2,3)4;;;;;/h(H2,1,2,3,4);;;;;/q;+2;;;;/p-2 Y
  Key: PIJPYDMVFNTHIP-UHFFFAOYSA-L Y
 • InChI=1S/H2O4S.Pb.4H/c1-5(2,3)4;;;;;/h(H2,1,2,3,4);;;;;/q;+2;;;;/p-2
  Key: PIJPYDMVFNTHIP-QKXYEYSFAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24008
 • [O-]S(=O)(=O)[O-].[PbH4+2]
பண்புகள்
PbSO4
வாய்ப்பாட்டு எடை 303.26 கி/மோல்
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
அடர்த்தி 6.29 கி/செமீ3[1]
உருகுநிலை 1,087 °C (1,989 °F; 1,360 K) சிதைவுறுகிறது
0.0032 கி/100 மிலி (15 °செல்சியசு)
0.00443 கி/100 மிலி (20 °செல்சியசு)[2]
2.13 x 10−8 (20 °செல்சியசு)
கரைதிறன் ஆல்ககாலில் கரைவதில்லை
−69.7·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.877
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், பேரைட்டு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−920 கிலோஜூல்·மோல்−1[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
149 ஜூல்·மோல்−1·கெல்வின்−1[3]
வெப்பக் கொண்மை, C 103 ஜூல்/டிகிரி மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Repr. Cat. 1/3
Toxic (T)
Harmful (Xn)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R61, R20/22, R33, R62, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Threshold Limit Value
0.15 மிகி/மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈய(II) குளோரைடு, ஈய மிருபுரோமைடு, ஈயம்(II) அயோடைடு, ஈய (II) புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வெள்ளீய(II) சல்பேட்டு, சோடியம் சல்பேட்டு, மயில் துத்தம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஈயம்(II) சல்பேட் (Lead(II) sulfate) என்பது PbSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்மை நிறத் திண்மமாகும். இது நுண்படிக அமைப்பைக் கொண்டுள்ளது. இது பால் வெள்ளை, சல்பூரிக் அமிலத்தின் ஈய உப்பு அல்லது ஆங்கிள்சைட் என்றும் அழைக்கப்படுகிறது .

இது பெரும்பாலும் ஈய அமில மின்கலன்களின் தகடுகள் / மின்முனைகளில் காணப்படுகிறது, மின்கலங்கள் மறுமின்னேற்றம் செய்யப்படும்போது ஈய சல்பேட்டானது அல்லது ஈய(IV) ஆக்சைடு மற்றும் கந்தக அமிலமாக எதிர் மின்முனையிலோ உலோக ஈயம் மற்றும் கந்தக அமிலமாக நேர்மின் முனையிலோ சேகரமாகிறது. ஈய சல்பேட்டு தண்ணீரில் மிகக் குறைந்த அளவே கரையக்கூடியது.

உற்பத்தி[தொகு]

ஈய ஆக்சைடு அல்லது ஈய ஐதராக்சைடு அல்லது ஈய கார்பனேட்டு ஆகியவற்றில் ஒன்றை சூடான கந்தக அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமோ அல்லது கரையக்கூடிய ஈய உப்பை கந்தக அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமோ ஈய(II) சல்பேட் தயாரிக்கப்படுகிறது.

மாற்றாக, ஈய நைட்ரேட்டு மற்றும் சோடியம் சல்பேட்டு ஆகியவற்றின் கரைசல்களுக்கிடையேயான வினை மூலமும் இதை உருவாக்க முடியும்.

நச்சியல்[தொகு]

ஈய சல்பேட்டு உள்ளிழுத்தல், உட்கொள்வது மற்றும் தோலில் படுதல் ஆகியவற்றின் காரணமாக நச்சுத்தன்மை வாய்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இதன் அளவு அதிகமாகும் போதும், மீண்டும் மீண்டும் ஈய வெளிப்பாட்டுடன் தொடர்பு ஏற்படுவதன் மூலமும் இரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு அல்லது மத்திய நரம்பு மண்டலத்திற்கு (குறிப்பாக குழந்தைகளில்) சேதம் ஏற்படலாம். இது அரிக்கும் தன்மையுடையது. கண்களுடன் தொடர்பு ஏற்படும் போது கடுமையான எரிச்சலும் தோலோடு தொடர்பு ஏற்படும் போது தீக்காயங்கள் போன்ற புண்கள் எற்படவும் வழிவகுக்கும். வழக்கமான தொடக்க நிலை வரம்பு மதிப்பு 0.15 மிகி/மீ3 ஆகும்.

தாது[தொகு]

இயற்கையான கனிமம் ஆங்கிள்சைட்டு, PbSO4, முதன்மையான ஈய சல்பைடு தாது, கலீனாவின் ஆக்சிசனேற்றத்தால் கிடைக்கப்பட்ட விளைபொருளாகக் கிடைக்கிறது.

கரைதிறன்[தொகு]

இச்சேர்மம் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் கரையக்கூடியதாகும். செறிவூட்டப்பட்ட ஐதரயோடிக் அமிலம் மற்றும் சூடான நீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆனால், எத்தனாலில் கரையாது. கரிம உலோகச் சேர்மங்கள் நீர் மற்றும் கரிமக் கரைப்பான்களில் கரையும் தன்மை கொண்டவை ஆகும்.

கார மற்றும் ஐதரசன் ஈய சல்பேட்டுகள்[தொகு]

பல ஈய கார சல்பேட்டுகள் அறியப்பட்டுள்ளன: PbSO4·PbO; PbSO4·2PbO;PbSO4·3PbO; PbSO4·4PbO போன்றவை அத்தகைய ஈய கார சல்பேட்டுகள் ஆகும். இவை ஈய அமில மின்கலங்களுக்கான செயலுறு பசை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடன் தொடர்புடைய ஒரு கனிமமானது லெட்ஐலைட்டு 2PbCO3·PbSO4·Pb(OH)2 ஆகும்.

சல்பூரிக் அமிலத்தின் அதிக செறிவில் (> 80%), ஈய ஐதரசன்சல்பேட்டு, Pb(HSO4)2, உருவாகின்றது.[4]

வேதியியல் பண்புகள்[தொகு]

ஈய(II) சல்பேட்டை செறிவூட்டப்பட்ட HNO3, HCl, H2SO4 ஆகியவற்றில் கரைத்து அமில உப்புக்கள் அல்லது அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது, மேலும் செறிவூட்டப்பட்ட காரங்களுடன் கரையக்கூடிய டெட்ராஐதராக்சிடோபிளம்பேட்டு (II) [Pb(OH)4]2− அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன.

PbSO 4 (s) + 4NaOH (aq) → Na 2 [Pb (OH) 4 ] (aq) + Na 2 SO 4 (aq)

1000° செல்சியசிற்கு மேல் வெப்பமடையச் செய்யும் போது காரீய(II) சல்பேட்டு சிதைவடைகிறது:

PbSO4 (s) → PbO (s) + SO3 (g)

பயன்கள்[தொகு]

ஈய சல்பேட்டு அச்சுத்தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணப்பூச்சு உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது .

குறிப்புகள்[தொகு]

 1. "CRC Handbook of Chemistry and Physics", 83rd Edition, CRC Press, 2002.
 2. "NIST-data review 1980" (PDF). Archived from the original (PDF) on 2014-02-11. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.
 3. 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
 4. Министерство образования и науки РФ, Реферат "Свинец и его свойства", 2007, http://revolution.allbest.ru/chemistry/00011389_0.html பரணிடப்பட்டது 2007-12-21 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்(II)_சல்பேட்டு&oldid=3849854" இலிருந்து மீள்விக்கப்பட்டது