இட்ரியம் இலித்தியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்ரியம் இலித்தியம் புளோரைடு (Yttrium lithium fluoride) LiYF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இது இருமடிஒளிமுறிவு பண்பு கொண்ட படிகமாகும். பொதுவாக நியோடிமியம் அல்லது பிரசியோடைமியம் தனிமங்களுடன் கல்ப்பு செய்யப்பட்டு, திட-நிலை சீரொளிகளில் ஆதாய ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இட்ரியம் என்பது LiYF4 சேர்மத்தில் உள்ள ஒரு மாற்று உறுப்பு ஆகும். இட்ரியம் இலித்தியம் புளோரைடு சேர்மத்தின் கடினத்தன்மை மற்ற பொதுவான படிகத்தை விட சீரொளி ஊடகத்தை விட கணிசமாக குறைவாக உள்ளது, அதாவது இட்ரியம் அலுமினியம் கார்னெட்டை விட குறைவாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ignat’ev, A. I.; Nikonorov, N. V.; Mochalov, I. V.; Tsygankova, E. V.; Reĭterov, V. M. (2007-11-01). "Features of the etching of an yttrium–lithium fluoride crystal in HNO3 solutions" (in EN). Journal of Optical Technology 74 (11): 776–778. doi:10.1364/JOT.74.000776. https://opg.optica.org/jot/abstract.cfm?uri=jot-74-11-776. 
  2. Chicklis, E.P.; Folweiler, R.C.; Naitnan, C.S. "0.85 MICRON SOLID STATE LASER: MATERIAL EVALUATION" (PDF). https://web.archive.org/web/20220510173745/https://apps.dtic.mil/sti/pdfs/AD0909527.pdf (PDF) from the original on May 10, 2022. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022. {{cite web}}: |archive-url= missing title (help)