வெள்ளி நைத்திரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி நைத்திரைட்டு
வெள்ளி நைத்திரைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) நைத்திரைட்டு
வேறு பெயர்கள்
அர்செண்டசு நைத்திரைட்டு
இனங்காட்டிகள்
7783-99-5 Yes check.svgY
ChemSpider 141361 Yes check.svgY
EC number 232-041-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 160904
UNII T3MZ57OGIF Yes check.svgY
பண்புகள்
AgNO2
வாய்ப்பாட்டு எடை 153.87 கி/மோல்
தோற்றம் நிறமற்றது முதல் மஞ்சள் நிறம் வரை
உருகுநிலை
0.155 கி/100 மி.லி (0 °செல்சியசு)
0.275 கி/100 மி.லி (15 °செல்சியசு
1.363 கி/100 மி.லி (60 °செல்சியசு)
கரைதிறன் எத்தனாலில் கரையாது.
−42.0·10−6 cm3/mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma-Aldrich
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H302, H315, H319, H400
P210, P220, P221, P264, P270, P273, P280, P301+312, P302+352, P305+351+338, P321, P330, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி நைத்திரைட்டு (Silver nitrite) AgNO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[2]

பயன்பாடுகள்[தொகு]

வெள்ளி நைத்திரைட்டு பல பயன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில:

  • அனிலின் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • ஒரு பொதுவான ஆக்சிசனேற்றும் முகவராகப் பயன்படுகிறது.
  • விக்டர் மேயர் வகை பதிலீட்டு வினைகளில் கரிம புரோமைடு அல்லது கரிம அயோடைடுகளுடன் வினையில் ஈடுபட்டு நைட்ரோ சேர்மங்களை உருவாக்குகிறது. [3]
  • தளத்தில் உருவாக்கப்பட்ட நைட்ரைல் அயோடைடுடன் வெள்ளி நைத்திரைட்டும் தனிம நிலை அயோடினும் வினைபுரிந்து நைட்ரோ ஆல்க்கீன் தயாரிக்கும் தொகுப்பு வினையில் பயன்படுகிறது. [4]

தயாரிப்பு[தொகு]

வெள்ளி நைட்ரேட்டும் சோடியம் நைத்திரைட்டு போன்ற ஒரு காரநைத்திரைட்டும் சேர்ந்து வினைபுரியும்போது வெள்ளி நைத்திரைட்டு உருவாகிறது.

AgNO3 (aq) + NaNO2 (s) → NaNO3 (aq) + AgNO2 (வீழ்படிவு)

வெள்ளி சல்பேட்டுடன் பேரியம் நைட்ரைட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் வெள்ளி நைத்திரைட்டு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

வெள்ளி நைட்ரேட்டை விடக் குறைவாக வெள்ளி நைத்திரைட்டு தண்ணீரில் கரைகிறது. வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் நைட்ரைட்டைச் சேர்த்தால் உடனடியாக வெள்ளி நைத்திரைட்டு வீழ்படிவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Silver nitrite". pubchem.ncbi.nlm.nih.gov (ஆங்கிலம்). 15 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. American elements
  3. Kornblum, N.; Ungnade, H. E. (1958). "1-Nitroöctane (Octane, 1-nitro-)". Organic Syntheses 38: 75. http://www.orgsyn.org/Content/pdfs/procedures/cv4p0724.pdf. பார்த்த நாள்: 6 January 2014. 
  4. Waldman, Steve; Monte, Aaron, Monte; Bracey, Ann; Nichols, David (1996). "One-pot Claisen rearrangement/O-methylation/alkene isomerization in the synthesis of ortho-methoxylated phenylisopropylamines". Tetrahedron Letters 37 (44): 7889–7892. doi:10.1016/0040-4039(96)01807-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_நைத்திரைட்டு&oldid=3385769" இருந்து மீள்விக்கப்பட்டது