உள்ளடக்கத்துக்குச் செல்

போரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போரசீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3,5,2,4,6-Triazatriborinane (only preselected[1])
வேறு பெயர்கள்
Borazine
Cyclotriborazaneborazol
Inorganic benzene
Borazole
இனங்காட்டிகள்
6569-51-3 Y
ChEBI CHEBI:33119 Y
ChemSpider 122374 Y
InChI
  • InChI=1S/B3H6N3/c1-4-2-6-3-5-1/h1-6H Y
    Key: BGECDVWSWDRFSP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/B3H6N3/c1-4-2-6-3-5-1/h1-6H
    Key: BGECDVWSWDRFSP-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 138768
  • B1NBNBN1
பண்புகள்
B3H6N3
வாய்ப்பாட்டு எடை 80.50 g/mol
தோற்றம் Colorless liquid
அடர்த்தி 0.81 g/cm3
உருகுநிலை −58 °C (−72 °F; 215 K)
கொதிநிலை 53 °C (127 °F; 326 K) (55 °C at 105 Pa)
-49.6·10−6 cm3/mol
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

போரசீன் (Borazine)என்பது (BH)3(NH)3  என்ற வேதி வாய்பாடு உடைய கனிமச் சேர்மம். இந்த வளையச்சேர்மத்தில், மூன்று BH அலகுகள் மற்றும் மூன்று NH அலகுகள் மாறி மாறி அமைந்துள்ளன. இது பென்சீனுடன் ஒத்த எலக்ட்ரான் எண்ணிக்கை மற்றும் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. பென்சீன் போன்றே போரசீனும் ஒரு நிறமற்ற திரவமாகும்.[2] இதனால், போரசீன் சில நேரங்களில் "கனிம பென்சீன்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

தொகுப்பு

[தொகு]

ஆல்பிரட்சுடோக் (Alfred Stock) மற்றும் ஐரிச் போலந்து (Erich Pohland) என்ற வேதியியளாலாளர்களால் 1926 ஆம் ஆண்டு அம்மோனியா[3] மற்றும் டைபோரேன் உடன் இணைத்து ஏற்படுத்திய வினைமாற்றத்தின் வழி இச்சேர்மம் கண்டறியப்பட்டது.

1:2 என்ற விகிதத்தில் 250-300 °C வெப்பநிலையில் டைபோரேன் மற்றும் அம்மோனியாவில் இருந்து 50% போரசீன் தொகுக்கப்படுகிறது.

:3 B2H6 + 6 NH3 → 2 B3H6N3 + 12 H2

இலித்தியம் போரோஐதரேட்டு மற்றும் அம்மோனியம் குளோரைடு இவற்றிலிருந்தும் போரசீன் பெறப்படுகிறது.

3 LiBH4 + 3 NH4Cl → B3H6N3 + 3 LiCl + 9 H2

இரண்டு படி செயல்முறையில், முதல் படியில் போரான் டிரைகுளோரைடுடிரைகுளோரோபென்சீனாக மாற்றப்படுகிறது.

:3 BCl3 + 3 NH4Cl → Cl3B3H3N3 + 9 HCl

இந்த B-Cl பிணைப்புகள் பின்னர் B-H பிணைப்புகளாக மாற்றப்படுகிறது.

:2 Cl3B3H3N3 + 6 NaBH4 → 2 B3H6N3 + 3 B2H6 + 6 NaCl

பண்புகள்

[தொகு]

போரசீன் நறுமண வாசனை கொண்ட நிறமற்ற திரவம் . நீரில் நீராப்பகுப்படைந்து போரிக் அமிலம், அம்மோனியா, ஐதரசனாக மாறுகிறது. போரசீனின், ஒரு நிலையான வெப்ப அடக்கம் மாற்றம் உருவாக்கம் (standard enthalpy change of formation) ΔHf , -531 kJ/mol, வெப்பநிலையில் மிகவும் நிலையானது.

அமைப்பு மற்றும் பிணைப்பு

[தொகு]

போரசீன், பென்சீனுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு ஆறு B-N பிணைப்புகளின் நீளம் 1.436 Å. பென்சீனில் கார்பன்–கார்பன் பிணைப்புகளின்  குறுகிய நீளம் 1.397 Å. போரான்–நைட்ரசன் ஒற்றை பிணைப்பு நீளம் 0.151 nm மற்றும் போரான்–நைட்ரசன் இரட்டை பிணைப்பு நீளம் 0.131 nm  இவை இரண்டிற்கும் இடையே போரான்-நைட்ரசன் பிணைப்பு நீளம் உள்ளது . நைட்ரசனின் தனித்த-ஜோடிஇலக்ட்ரான்களின் பகுதியளவு உள்ளடங்காத்தன்மையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பெளலிங் அளவில் ஒப்பிடும்போது போரானின் இலத்திரன்இழுதிறன்(2.04), நைட்ரசன் (3.04) மற்றும் போரான் அணுவின் இலத்திரான் குறைபாடு, நைட்ரசனின் தனித்த ஐோடி இலத்திரான்கள் இவைகளினால் போரசீன் மாற்று உடனிசைவுக் கட்டமைப்புளைக் கொண்டுள்ளது.

போரான் ஒரு லூயிஸ் அமிலமாகும் மற்றும் நைட்ரசன் ஒரு லூயிஸ் காரம்.

வினைகள்

[தொகு]

பென்சீனுடன் ஒப்பிடுகைகளில் போரசீன் அதிக வினைத்திறன் உடையது. ஐதரசன் குளோரைடு உடன் கூட்டுப்பொருளைத் தருகிறது. ஆனால், ஐதரசன் குளோரைடு உடன் பென்சீன் வினைபுரிவதில்லை.

Polyborazylene (பாலிபோரோசைலீன்)

:B3N3H6 + 3 HCl → B3N3H9Cl3

போரசீன், ஐதரசன் குளோரைடு உடனான சேர்க்கை வினை

:B3N3H9Cl3 + NaBH4 → (BH4N)3

சோடியம் போரோஐதரைடு உடனான குறைப்பு வினை.

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

கார்போரசீன் மற்றொரு ஆறு உறுப்புகளைக் வளையத்தில் கொண்டுள்ள அரோமேடிக் சேர்மம். இதில் இரண்டு கார்பன் அணுக்கள், இரண்டு நைட்ரசன் அணுக்கள் மற்றும் இரண்டு போரான் அணுக்கள் எதிரெதிர் ஜோடிகளாக உள்ளன.[4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 968. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. Duward Shriver; Peter Atkins (2010). Inorganic Chemistry (Fifth ed.). New York: W. H. Freeman and Company. p. 328. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1429218207. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author2= and |last2= specified (help); More than one of |author= and |last= specified (help)
  3. Stock, Alfred; Pohland, Erich (October 1926). "Borwasserstoffe, VIII. Zur Kenntnis des B2H6 und des B5H11 [Boric acid solution, VIII Regarding knowledge of B2H6 and B5H11]" (in German). Berichte 59 (9): 2210–2215. doi:10.1002/cber.19260590906. 
  4. Srivastava, Ambrish Kumar, and Neeraj Misra.
  5. Bonifazi, Davide; Fasano, Francesco; Lorenzo-Garcia, M. Mercedes; Marinelli, Davide; Oubaha, Hamid; Tasseroul, Jonathan (2015). "Boron–nitrogen doped carbon scaffolding: organic chemistry, self-assembly and materials applications of borazine and its derivatives". Chem. Commun. 51 (83): 15222–15236. doi:10.1039/C5CC06611E. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரசீன்&oldid=3866002" இலிருந்து மீள்விக்கப்பட்டது