அசாபோரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளோசோவின் கட்டமைப்பு-NB9H10[1]

அசாபோரேன் (Azaborane) என்பது வழக்கமாக ஒரு போரான்-ஐதரைடு தொகுதியைக் குறிக்கும். இத்தொகுதியின் BH உச்சிகள் N அல்லது NR குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். ( R = H , கரிம பதிலியாகும்)

பல தொடர்புடைய போரேன்கள் போல இந்த தொகுதிகளும் பன்முகம் கொண்டவையாக உள்ளன. எனவே இவற்றையும் குளோசோ, நிடோ, அராக்னோ, இத்யாதி என வகைப்படுத்த இயலும். பன்முகக் கூடு எலக்ட்ரான் இணை கோட்பாட்டிற்கான வேடு விதிகளின் படி வரையறுப்பதென்றால் NR 4 எலக்ட்ரான் உச்சியையும் N 3 எலக்ட்ரான் உச்சியையும் கொண்டிருக்கும். மின்சுமை-நடுநிலை நிடோ-( NB10H13 ( அதாவது (NH)(BH)10), குளோசோ-NB11H12 ( அதாவது (NH)(BH)11) போன்றவை முதன்மையான எடுத்துக்காட்டுகளாகும்[2].

இமினோபோரேன்கள் (வாய்ப்பாடு = RN=NR'), போரசீன்கள் போன்ற எளிய சேர்மங்களும் அசோபோரேன்கள் என்றே குறிப்பிடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lenka Schneider, Ulli Englert, Peter Paetzold (1994). "Die Kristallstruktur von Aza‐closo‐decaboran NB9H10". Z. Anorg. Allg. Chem. 620: 1191–1193. doi:10.1002/zaac.19946200711. 
  2. P. Paetzold (1991). "New Perspectives in Boron-Nitrogen Chemistry-I". Pure Appl. Chem. 63: 345–350. doi:10.1351/pac199163030345. https://www.iupac.org/publications/pac/pdf/1991/pdf/6303x0345.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாபோரேன்&oldid=2956319" இருந்து மீள்விக்கப்பட்டது