எக்சா போரேன்(12)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எக்சா போரேன்(12)
இனங்காட்டிகள்
23777-80-2
பண்புகள்
B6H10
வாய்ப்பாட்டு எடை 74.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எக்சா போரேன்(12) (Hexaborane(12)) என்பது B6H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறுபோரேன்(12) என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் போரேன்கள் குடும்பத்தில் ஒரு தெளிவற்ற உறுப்பினராக உள்ளது. பெரும்பாலான மற்ற போரேன் ஐதரைடுகளைப் போலவே இதுவும் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. தீப்பற்றி எரியக்கூடியதாகவும் விரைவில் நீராற்பகுப்பு அடையக் கூடியதாகவும் உள்ளது.

BnHn+6, என்ற வாய்ப்பாட்டு அமைப்புடன் சி2 சமச்சீர் குழுவினை இச்சேர்மத்தின் மூலக்கூற்று கட்டமைப்பு உறுதி செய்கிறது. சிலந்திக் கொத்து மூலக்கூறு அமைப்பில் வகைப்படுத்தப்படும் இம்மூலக்கூறில் போரானின் ஆறு இடங்களும் B8H2− வால் மூடப்பட்ட சட்டமாகப் பொருந்தியுள்ளன.

தயாரிப்பு[தொகு]

கொத்து விரிவாக்க முறையில், பென்டாபோரேன் – 9 இனினுடைய இணை காரமான B5H−8, இலிருந்து எக்சா போரேன்(12) தயாரிக்கப்படுகிறது [1].

LiB5H8 + 1/2 B2H6 → LiB6H11

LiB6H11 + HCl → B6H12 + LiCl

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.  p.172.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சா_போரேன்(12)&oldid=2934054" இருந்து மீள்விக்கப்பட்டது