வெள்ளி பாசுப்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சில்வர்(I) பாசுப்பேட்டு
| |
வேறு பெயர்கள்
பாசுபாரிக் அமிலம், சில்வர்(I) உப்பு; வெள்ளி(I) உப்பு; அர்கெண்டசு பாசுப்பேட்டு; சில்வர் பாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7784-09-0 | |
ChemSpider | 140592 |
EC number | 232-049-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159913 |
| |
பண்புகள் | |
Ag3PO4 | |
வாய்ப்பாட்டு எடை | 418.574 கி/மோல் |
தோற்றம் | ஒளி ஊடுறுவும் மஞ்சள் அசுத்தமடையும் போது ஒளிபுகாது அல்லது நிறமிழக்கிறது. |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 6.370 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 849 °C (1,560 °F; 1,122 K) |
0.00065 கிராம்/100 மில்லி லிட்டர் | |
−120.0•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Sigma-Alrdich |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி பாசுப்பேட்டு (Silver phosphate) என்பது Ag3PO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இதை வெள்ளி ஆர்த்தோபாசுப்பேட்டு, சில்வர் பாசுப்பேட்டு, சில்வர் ஆர்த்தோபாசுப்பேட்டு என்ற பெயர்களாலும் அழைப்பர். வெள்ளியும் பாசுப்பேட்டு அயனியும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் மஞ்சள் நிறம் கொண்டதாகவும், ஒளி உணரியாகவும் உள்ளது, இது நீரில் கரையாது.
தயாரிப்பு
[தொகு]வெள்ளி நைட்ரேட்டு போன்ற ஒரு கரையக்கூடிய வெள்ளி சேர்மத்துடன் கரையக்கூடிய ஆர்த்தோபாசுப்பேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மஞ்சள் நிற விழ்படிவாக வெள்ளி பாசுப்பேட்டு உருவாகிறது [1]. இதன் கரைதிறன் பெருக்க மதிப்பு 8.89×10−17 மோல்l4டெசிமீட்டர்−12.[2][3] ஆகும்.
இந்த வீழ்படிவாகும் வினை பகுப்பாய்வு வேதியியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது [4]. பாசுபேட்டுகளுக்கான பண்பறிவு அல்லது பருமனறிவு சோதனைகளில் இதைப் பயன்படுத்தப்படலாம்.
பண்புகள்
[தொகு]இந்தச் சேர்மம் நைட்ரிக் அமிலம் அல்லது அம்மோனியாவில் கரைகிறது [1]. வெள்ளி பாசுபேட்டின் அம்மோனியா கரைசலிலிருந்து அம்மோனியாவை படிப்படியாக இழக்கச் செய்வதன் மூலம் பெரிய படிகங்களாக இது உருவாகிறது. பாசுப்பேட்டு அயனிகளின் அளவறி பகுப்பாய்வில் இவ்வினை பயன்படுத்தப்படுகிறது [5]. தயாரிப்பு முறைகளுக்கு ஏற்ப வெள்ளி பாசுபேட்டின் பல்வேறு படிக வடிவங்களை அதே அணிக்கோவை கட்டமைப்புடன் உருவாக்க முடியும்.
பயன்கள்
[தொகு]பகுப்பாய்வு வேதியியலில் முக்கியத்துவம் மிக்கதாக இருப்பதுடன், வெள்ளி பாசுபேட்டின் இந்த வீழ்படிவு வினை, வெள்ளியாக ஒடுக்கப்பட்ட பின்னர் உயிரியல் பொருட்களின் வெள்ளி நிறமிடுதலில் பாசுப்பேட்டு உருப்பெருக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது [6].
தொடக்கக்கால புகைப்படத் தொழிலில் ஒளி உணரும் முகவராக வெள்ளி பாசுப்பேட்டு பயன்பட்டது[7].
தண்ணீரை கட்புல ஒளிவேதியியல் சிதைவுக்கு உட்படுத்தும் செயல்முறையில் வெள்ளி பாசுபேட்டு ஓர் ஒளி வினையூக்கியாக உயர் குவாண்டம் விளைச்சளைக் (90%) கொடுப்பதாக 2010 ஆம் ஆண்டு அறியப்பட்டது. இதே முறையில் செயலூக்கப்பட்ட ஆக்சிசன் உற்பத்தி செய்யவும் வெள்ளி பாசுப்பேட்டு பயன்படுவதாக அறிவிக்கப்பட்டது[8][9]. வெள்ளி அயனி பாக்டீரியா எதிர்ப்பொருளை பொருட்களுக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடிய சாத்தியமான ஒரு பொருளாகவும் வெள்ளி பாசுப்பேட்டு திறன் மிக்க சேர்மமாகும்[10].
பிற வெள்ளி பாசுப்பேட்டுகள்
[தொகு]வெள்ளி(I) மற்றும் பைரோபாசுப்பேட்டு அயனி இரண்டையும் வினைபுரியச் செய்து வெள்ளி பைரோபாசுப்பேட்டை (சிஏஎசு எண். 13465-97-9) வெண்மை நிற விழ்படிவாகத் தயாரிக்கிறார்கள். வெள்ளி ஆர்த்தோபாசுப்பேட்டைப் போல இதுவும் ஓர் ஒளி உணரியாகும். ஒளியில் வெளிப்பட நேர்ந்தால் வெள்ளி ஆர்த்தோபாசுப்பேட்டு சிவப்பு நிறமாக மாறுகிறது[11]. இதனுடைய அடர்த்தி 5.306கிராம்/செ.மீ3 மற்றும் இதன் உருகுநிலை 585 °செல்சியசு ஆகும்[12]. 110 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையக்கூடிய ஒரு நீரேற்றும் அறியப்படுகிறது.
AgPO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட வெண்மை நிறத் திண்மமான வெள்ளி மெட்டாபாசுப்பேட்டு (சிஏஎசு எண். 13465-96-8) சேர்மம் ஒன்றும் அறியப்படுகிறது [13]. இதன் அடர்த்தி 6.370 கிராம்/செ.மீ3 மற்றும் உருகுநிலை 482 °செல்சியசு ஆகும். 240 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையக்கூடிய ஒரு நீரேற்றும் அறியப்படுகிறது [12].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Phosphates பரணிடப்பட்டது 2010-08-28 at the வந்தவழி இயந்திரம் www.1911encyclopedia.org
- ↑ Ksp solubility constant for common salts www.solubilityofthing.com
- ↑ SOLUBILITY PRODUCT CONSTANTS பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம் www.ktf-split.hr
- ↑ Inorganic chemistry , Egon Wiberg, Nils Wiberg, Arnold Frederick Holleman , Academic Press , 2001] p.721 Google Books excerpt
- ↑ F.H. Firsching (1961). "Precipitation of Silver Phosphate from Homogenous Solution". Anal. Chem. 33 (7): 873. doi:10.1021/ac60175a018.
- ↑ Taichman, R. S.; Hauschka, P. V. (1992). "Effects of interleukin-1? And tumor necrosis factor-? On osteoblastic expression of osteocalcin and mineralized extracellular matrix in vitro". Inflammation 16 (6): 587–601. doi:10.1007/BF00919342. பப்மெட்:1459694. Free version
- ↑ Cassell's cyclopaedia of photography , Bernard Edward Jones , Ayer Publishing , 1973 , p.401 'Phosphate plates and papers' , googlebooks link
- ↑ Yi, Z.; Ye, J.; Kikugawa, N.; Kako, T.; Ouyang, S.; Stuart-Williams, H.; Yang, H.; Cao, J. et al. (2010). "An orthophosphate semiconductor with photooxidation properties under visible-light irradiation". Nature Materials 9 (7): 559–564. doi:10.1038/nmat2780. பப்மெட்:20526323. Bibcode: 2010NatMa...9..559Y.
- ↑ Discovery of a Novel High Activity Photocatalyst Material: A Great Step Toward the Realization of Artificial Photosynthesis Discovery of a Revolutionary Oxidation Property in Silver Phosphate with Quantum Yield of Approximately 90% in Visible Light , 2010/06/07 , press release , National Institute for Materials Science (NIMS) Japan , www.nims.go.jp
- ↑ Nanocoated film as a bacteria killer 23/1/2009 , www.nanowerk.com
- ↑ Silver Compounds பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம் p.5 , section 2.22 , from Kirk-Othmer Encyclopedia of Chemical Technology , Authors: SAMUEL F. ETRIS (The Silver Institute), C. ROBERT CAPPEL (Eastman Kodak Company) , via www.scribd.com
- ↑ 12.0 12.1 Bulletin of the National Research Council , National Research Council (U.S.A) , 1950 , pp.56-57 google books link
- ↑ Silver metaphosphate www.chemicalbook.com