உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி அசிட்டேட்டு
Silver acetate
வெள்ளி அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசிட்டிக் அமில வெள்ளி உப்பு
வெள்ளி எத்தனோயேட்டு
இனங்காட்டிகள்
563-63-3 Y
ChemSpider 10772 Y
EC number 209-254-9
InChI
  • InChI=1S/C2H4O2.Ag/c1-2(3)4;/h1H3,(H,3,4);/q;+1/p-1 Y
    Key: CQLFBEKRDQMJLZ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/C2H4O2.Ag/c1-2(3)4;/h1H3,(H,3,4);/q;+1/p-1
    Key: CQLFBEKRDQMJLZ-REWHXWOFAJ
யேமல் -3D படிமங்கள் Image

அயன ஒருபடி
Image Ag-Ag பிணைப்பற்ற இருபடி
Image Ag-Ag பிணைப்புடன் இருபடி

பப்கெம் 11246
வே.ந.வி.ப எண் AJ4100000
  • CC(=O)[O-].[Ag+] அயன ஒருபடி
  • Cc0[o+][Ag-]oc(C)[o+][Ag]o0 Ag-Ag பிணைப்பற்ற இருபடி
  • Cc0[o+][Ag-]1oc(C)[o+][Ag]1o0 Ag-Ag பிணைப்புடன் இருபடி
UNII 19PPS85F9H Y
பண்புகள்
AgC2H3O2
வாய்ப்பாட்டு எடை 166.912 கி/மோல்
தோற்றம் வெண்மையும் சாம்பல் நிறமும் கொண்ட தூள்
இலேசான் அமில நெடி
அடர்த்தி 3.26 கி/செ.மீ3, திண்மம்
கொதிநிலை 220 °செல்சியசில் சிதைவடையும்
1.02 கி/100 மி.லி (20 °செ)
−60.4•10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வெள்ளி அசிட்டேட்டு (Silver acetate) என்பது CH3CO2Ag (அல்லது AgC2H3O2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஓளி உணரியாகவும், வெண்மை நிறங் கொண்டும் காணப்படும் இச்சேர்மம் ஒரு படிகத் திண்மமாகும். ஆய்வகங்களில் வெள்ளி அயனியை கொடுக்கக் கூடிய ஒரு வினையாக்கியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தில் ஆக்சிசனேற்றும் எதிர்மின் அயனி இல்லை, புகைப்பிடித்தலை எதிர்க்கும் சில மருந்துகளில் இதை பயன்படுத்துகிறார்கள்.

தயாரிப்பு

[தொகு]

அசிட்டிக் அமிலம் மற்றும் வெள்ளி கார்பனேட்டு இரண்டையும் 45-60 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் வெள்ளி அசிட்டேட்டு தயாரிக்க முடியும். அறை வெப்பநிலையில் குளிரூட்டலை அனுமதித்த பிறகு, திண்ம வெள்ளி அசிட்டேட்டு வீழ்படிவாகிறது [1]

2 CH3CO2H + Ag2CO3 → 2 AgO2CCH3 + H2O + CO2.

சோடியம் அசிடேட்டு கரைசலுடன் வெள்ளி நைட்ரேட்டின் செறிவூட்டப்பட்ட நீரிய கரைசலை சேர்த்து சூடாக்கப்பட்டாலும் வெள்ளி அசிட்டேட்டு உருவாகிறது.

கட்டமைப்பு

[தொகு]

ஒரு சோடி அசிட்டேட்டு ஈந்தனைவிகள் ஒரு சோடி வெள்ளி மையங்களுடன் பாலம் அமைத்து உருவாகும் எட்டு உறுப்பு Ag2O4C2 வளையங்களால் வெள்ளி அசிட்டேட்டின் கட்டமைப்பு ஆக்கப்பட்டுள்ளது [2].

வினைகள்

[தொகு]

வெள்ளி அசிட்டேட்டின் வேதி வினைகள் கரிம தொகுப்பு வினைகளில் சில நிலை மாற்ற வினைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன [3].

சல்பீனமைடுகள் தயாரிப்பு

[தொகு]

டைசல்பைடு மற்றும் இரண்டாம் நிலை அமீன்களுடன் வெள்ளி அசிடேட்டை சேர்த்து வினை புரியச் செய்து சல்பீனமைடுகள் தயாரிக்கப்படுகின்றன :[3]

R2NH + AgOAc + (RS)2 → R2NSR + AgSR + HOAc.

ஐதரசனேற்றம்

[தொகு]

பிரிடினிலுள்ள வெள்ளி அசிட்டேட்டு கரைசல் ஐதரசனை உறிஞ்சி, தனிம நிலை வெள்ளியை உருவாக்குகிறது :[4]

2 CH3CO2Ag + H2 → 2 Ag + 2 CH3CO2

ஆர்த்தோ அரைலேற்றம்

[தொகு]

நேரடியான ஆர்த்தோ-அரைலேற்ற வினைகளுக்கு ஒரு நல்ல வினையாக்கியாகும். பென்சைலமீன்களும் என்-மெத்தில்பென்சைலமீன்களும் . இவ்வாறு ஆர்த்தோ அரைலேற்றம் செய்யப்படுகின்றன. ஓர் அரோமாட்டிக் வளையத்தில் அடுத்தட்டுத்து இரண்டு பதிலீடுகளை நிறுவுதல் ஆர்த்தோ அரைலேற்றம் எனப்படும். இவ்வினையில் பலேடியம் வினையூக்கியாகச் செயல்படுகிறது. சிறிது மிகையளவு வெள்ளி அசிட்டேட்டும் அவசியமாகிறது [5]. இந்த வினை முந்தைய ஆர்த்தோ -அரைலேற்ற முறைகளை விட குறைவான நேரத்தில் முடிகிறது.

ஆக்சிசனேற்ற ஆலசன் நீக்கம்

[தொகு]

சில கரிம ஆலசன் சேர்மங்களை ஆல்ககால்களாக மாற்ற வெள்ளி அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. அதிக செலவு இருந்தபோதிலும், இலேசான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வினையாக்கிகளை விரும்பும் நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

உட்வார்டு சிசு ஐதராக்சிலேற்றம்

[தொகு]

அயோடினுடன் இணைந்து வெள்ளி அசிட்டேட்டு உட்வார்ட் சிசு- ஐதராக்சிலேற்ற வினைக்கான அடிப்படையை உருவாக்குகிறது. இந்த வினையானது ஓர் ஆல்க்கீனை தேர்ந்தெடுத்து அதை ஒரு சிசு-டையாலாக மாற்றுகிறது [6].

பயன்கள்

[தொகு]

சுகாதாரத் துறையில், புகைபிடிப்பவர்களை புகைபிடிப்பதைத் தடுக்கும் மருந்துகளில் வெள்ளி அசிட்டேட்டு கொண்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளில் உள்ள வெள்ளி, புகையுடன் கலக்கும்போது, புகைப்பிடிப்பவரின் வாயில் விரும்பத்தகாத உலோக சுவையை உருவாக்குகிறது, இதனால் அவை புகைப்பிடிப்பதைத் தடுக்கின்றன. 2.5 மில்லி கிராம் அளவு கொண்ட சர்க்கரை கலந்த இம்மிட்டாய் போன்ற மருந்துகள் 500 புகைப்பிடிப்பவர்களுக்கு மூன்று மாத காலப்பகுதியில் பரிசோதிக்கப்பட்டது வெள்ளி அசிட்டேட்டு இச்சோதனையில் ஒரு மிதமான செயல்திறனை காட்டியது. இருப்பினும் 12 மாத காலப்பகுதியில், தடுப்பு தோல்வியடைந்தது. 1974 ஆம் ஆண்டில், வெள்ளி அசிட்டேட்டு முதன்முதலில் ஐரோப்பாவில் புகைபிடிப்பதைத் தடுக்கும் மருந்தாகப் பயன்பட்டது. பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மெல்லும் பசையாக அறிமுகப்படுத்தப்பட்டது. [7]

வெள்ளி அசிடேட்டு அச்சிடப்படும் மின்னணுவியலில் பொருட்களில் பயன்படுத்தப்படும் நன்கு அறியப்பட்ட ஒரு முன்னோடி சேர்மம் ஆகும். குறிப்பாக, வெள்ளி அசிட்டேட்டு அணைவுச் சேர்மங்கள் துகள் இல்லாத வினை புரியும் மைகளை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன [8].

பாதுகாப்பு

[தொகு]

எலிகளில் வெள்ளி அசிட்டேட்டின் உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 36,7 கிராம் ஆகும். வெள்ளி அசிட்டேட்டின் குறைந்த அளவே சுண்டெலிகளில் மத்திய நரம்பு மண்டல மனச்சோர்வு, உழைப்பு சுவாசம் மற்றும் இறப்பு போன்றவற்றை உருவாக்கியது. வெள்ளி அசிட்டேட்டு உட்கொள்ளல் 756 மில்லி கிராம் வரை இருக்கலாம் என்று அமெரிக்க எஃப்.டி.ஏ பரிந்துரைக்கிறது [7][9].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Logvinenko, V.; Polunina, O.; Mikhailov, Yu; Mikhailov, K.; Bokhonov, B. (2007). "Study of Thermal Decomposition of Silver Acetate". Journal of Thermal Analysis and Calorimetry 90 (3): 813–816. doi:10.1007/s10973-006-7883-9. 
  2. Leif P. Olson, David R. Whitcomb, Manju Rajeswaran, Thomas N. Blanton, Barbara J. Stwertka "The Simple Yet Elusive Crystal Structure of Silver Acetate and the Role of the Ag−Ag Bond in the Formation of Silver Nanoparticles during the Thermally Induced Reduction of Silver Carboxylates" Chem. Mater., 2006, volume 18, pp 1667–1674. எஆசு:10.1021/cm052657v
  3. 3.0 3.1 Mary K. Balmer,Brian A. Roden, Dave G. Seapy (2008). Silver(I) Acetate. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rs013m.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471936237. {{cite book}}: |journal= ignored (help)
  4. Wright, Leon; Well, Sol; Mills, G.A. (1955). "Homogeneous Catalytic Hydrogenation III. Activation of Hydrogen by Cuprous and Silver Acetates in Pyridine and Dodecylamine". Journal of Physical Chemistry 59 (10): 1060–1064. doi:10.1021/j150532a016. 
  5. Lazareva, Anna; Daugulis (2006). "Olafs". Direct Palladium-Catalyzed Ortho-Arylation of Benzylamines 8 (23): 5211–5213. doi:10.1021/ol061919b. பப்மெட்:17078680. 
  6. Woodward, R. B.; Brutcher, F. V. (January 1958). "cis-Hydroxylation of a Synthetic Steroid Intermediate with Iodine, Silver Acetate and Wet Acetic Acid". Journal of the American Chemical Society 80 (1): 209–211. doi:10.1021/ja01534a053. 
  7. 7.0 7.1 Hymowitz, Norman; Eckholdt, Haftan (1996). "Effects of a 2.5-mg Silver Acetate Lozenge on Initial and Long-Term Smoking Cessation". Journal of Preventive Medicine 25 (5): 537–546. doi:10.1006/pmed.1996.0087. பப்மெட்:8888321. 
  8. "Reactive Silver Inks for High-Performance Printed Electronics". Sigma-Aldrich (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-11.
  9. E. J. Jensen; E. Schmidt; B. Pedersen; R. Dahl (1991). "Effect on smoking cessation of silver acetate, nicotine and ordinary chewing gum, Influence of smoking history". Psychopharmacology 104 (4): 470–474. doi:10.1007/BF02245651. பப்மெட்:1780416. https://archive.org/details/sim_psychopharmacology_1991-08_104_4/page/470. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_அசிட்டேட்டு&oldid=3521481" இலிருந்து மீள்விக்கப்பட்டது