இண்டியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டியம் அசிட்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இண்டியம் எத்தனோயேட்டு
இண்டியம்(III) அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
25114-58-3 Y
ChemSpider 147211
EC number 629-609-5
InChI
  • InChI=1S/3C2H4O2.In/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: VBXWCGWXDOBUQZ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16685169
SMILES
  • CC(=O)O[In](OC(=O)C)OC(=O)C
UNII BNM20F6I0P
பண்புகள்
In(CH3COO)3
வாய்ப்பாட்டு எடை 291.96
தோற்றம் வெண்மையான நீருறிஞ்சும் தூள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இண்டியம் நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் காலியம் அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இண்டியம் அசிட்டேட்டு (Indium acetate) In(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சேர்மமாகும். இண்டியம் தனிமத்தின் அசிட்டேட்டு உப்பு என இது வகைப்படுத்தப்படுகிறது. நீர், அசிட்டிக் அமிலம் மற்றும் கனிம அமிலங்களில் இண்டியம் அசிட்டேட்டு கரையும்.[1] CuInS2 போன்ற சூரிய மின்கலப் பொருட்கள்,[2] இண்டியம் பாசுபைடு, குறைக்கடத்தி நுண்படிகங்கள் போன்ற இண்டியம்-கொண்ட சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

உறைந்த அசிட்டிக் அமிலத்துடன் இண்டியம்[4] அல்லது மூவெத்தில் இண்டியம்[5] ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இண்டியம் அசிடேட்டைத் தயாரிக்கலாம்.

வேதிப்பண்புகள்[தொகு]

புரோப்பியானிக் அமிலத்துடன் இண்டியம் அசிட்டேட்டு வினைபுரிகிறது.:[4]

In(CH3COO)3 + CH3CH2COOH → In(CH3COO)2(CH3CH2COO) + CH3COOH

மேற்கோள்கள்[தொகு]

  1. 42230 Indium(III) acetate, 99.99% (metals basis). Alfa Aesar. [2017-11-6]
  2. 杨霈. 太阳能电池材料CuInS2带隙的缺陷调制研究[D]. 北京理工大学, 2014.
  3. 王彬彬, 王莉, 汪瑾,等. 基于元素磷源的InP量子点的制备[J]. 无机化学学报, 2012, 28(2):342-346.
  4. 4.0 4.1 Lindel, W.; Huber, F. Preparation and some properties of indium(III) carboxylates. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1974. 408(2) 167-174.
  5. 胡益民, 周虹屏. 醋酸铟化合物的合成及热稳定性研究[J]. 合成化学, 1999(1):12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்_அசிட்டேட்டு&oldid=3775356" இலிருந்து மீள்விக்கப்பட்டது