இண்டியம் ஆர்சினைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இண்டியம் ஆர்சினைடு[1]
Sphalerite-unit-cell-3D-balls.png
Indium arsenide.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(III) ஆர்சனைடு
வேறு பெயர்கள்
இண்டியம் மோனோ ஆர்சனைடு
இனங்காட்டிகள்
1303-11-3 Yes check.svgY
ChemSpider 82621 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 91500
பண்புகள்
InAs
வாய்ப்பாட்டு எடை 189.740 கி/மோல்
அடர்த்தி 5.67 கி/செ.மீ3
உருகுநிலை
Band gap 0.354 eV (300 K)
எதிர்மின்னி நகாமை 40000 செ.மீ2/(V*s)
வெப்பக் கடத்துத்திறன் 0.27 W/(cm*K) (300 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 3.51
கட்டமைப்பு
படிக அமைப்பு துத்தநாக பிளெண்ட் படிக வடிவம்
Lattice constant a = 6.0583 Å
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-58.6 [[கி.யூ/மோல்−1]]
நியம மோலார்
எந்திரோப்பி So298
75.7 யூ·மோல்−1·K−1
வெப்பக் கொண்மை, C 47.8 யூ·மோல்−1·K−1
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Toxic (T)
சூழலுக்கு அபாயம் (N)
R-சொற்றொடர்கள் R23/25, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S20/21, S28, S45, S60, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இண்டியம் பாசுப்பைடு
இண்டியம் ஆன்டிமோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் காலியம் ஆர்சினைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இண்டியம் ஆர்சினைடு (Indium arsenide) InAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் மோனோ ஆர்சினைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம், ஒரு குறை கடத்தியாக செயல்படுகிறது. இண்டியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து உருவாகும் இண்டியம் ஆர்சினைடு சாம்பல் நிறத்தில் கனசதுர படிகங்களாகவும் 942 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகக்கூடியதாகவும் உள்ளது. [2] 1–3.8 µm அலைநீளமுள்ள அகச்சிவப்பு உணரிகள் உருவாக்குவதில் இண்டியம் ஆர்சினைடு பெரிதும் பயன்படுகிறது. இவ்வுணரிகள் பொதுவாக ஒளிமின்னழுத்த ஒளிமின் இருமுனையங்கள் ஆகும். அதிககுளிரூட்டப்பட்ட உணரிகள் குறைந்த ஓசையைக் கொண்டுள்ளன. ஆனால், இண்டியம் ஆர்சினைடு உணரிகளை அறைவெப்பநிலையிலும் அதிக மின்னாற்றல் பயன்பாடுகளிலும் கூட பயன்படுத்த முடியும். இருமுனைய சீரொளிகளை உருவாக்கத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது.

காலியம் ஆர்சினைடு சேர்மத்தின் பொஅண்புகளுடன் இண்டியம் ஆர்சினைடின் பண்புகளும் ஒத்துள்ளன. மேலும் இதுவொரு நேரடியான பட்டைஇடைவெளி வேதிப் பொருளாகும்.

இண்டியம் ஆர்சினைடு சிலசமயங்களில் இண்டியம் பாசுபைடுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது, இண்டியம் நைத்திரைடுடன் காலியம் நைத்திரைடு சேர்த்து இண்டியம் காலியம் நைத்திரைடு தயாரிப்பது போலவே இண்டியம் காலியம் ஆர்சினைடு என்ற உலோகக் கலவை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

ஒரு வலிமையான ஒளி-தெம்பெர் உமிழியாக இருப்பதால் இதை டெராகெர்ட்சு கதிரியக்க மூலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இண்டியம் பாசுபைடு அல்லது காலியம் ஆர்சினைடு மீதுள்ள ஒற்றை அடுக்கு இண்டியம் ஆர்சினைடில் குவாண்டம் புள்ளிகளை உருவாக்க முடியும் [3].

பொருட்களின் பொருத்தமற்ற அணிக்கோவை மாறிலிகள் மேற்பரப்பு அடுக்கில் இழுவிசையை உருவாக்குவதால் குவாண்டம் புள்ளிகள் தோன்றுகின்றன. காலியம் ஆர்சினைடு அணியில் இண்டியம் ஆர்சினைடு புள்ளிகள் இடம்பெற்றுள்ள இண்டியம் காலியம் ஆர்சினைடிலும் குவாண்டம் புள்ளிகளை உருவாக்க இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–61, ISBN 0-8493-0594-2
  2. "Thermal properties of Indium Arsenide (InAs)". பார்த்த நாள் 2011-11-22.
  3. "oe magazine - eye on technology". மூல முகவரியிலிருந்து 2006-10-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-11-22.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்_ஆர்சினைடு&oldid=2688141" இருந்து மீள்விக்கப்பட்டது