குறை மாழை
குறை மாழைகள் (poor metals) என்னும் குழுப் பெயர் தனிம அட்டவணையில் பிறழ்வரிசை மாழைகளைத் தாண்டி உள்ள மாழைத்தன்மை குறைந்த ஆனால் மாழைகளாகிய வேதியியல் தனிமங்களைக் குறிக்கும். இத்தனிமங்கள், எதிர்மின்னிக் கூடுகளில் மிக அதிக ஆற்றல் உள்ள எதிர்மின்னிகள் p-சுற்றுப்பாதைக் கூட்டில் இருக்கும் தனிமங்களுடன் சேர்ந்த ஒரு தனிக்குழுவாகும். குறைமாழைகள் தனிம அட்டவனையில் உள்ள பிறழ்வரிசை மாழைகளை விடவும் மென்மையானவை, குறைந்த உருகுநிலையும் கொதிநிலையும் கொண்டவை, ஆனால் எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு கூடுதலாக உள்ளவை. தனிம அட்டவணையில் அதே வரிசையில் உள்ள மாழையனை (மாழைபோல்வன) என்னும் வகையைச் சார்ந்த தனிமங்களை விடவும் கூடுதலான கொதிநிலை கொண்டவை.
குறைமாழைகள் என்பது ஆங்கிலத்தில் Poor metals எனப்படுகின்றன ஆனால் "Poor metals" என்பது அனைத்துலக தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) ஒப்புதல் பெற்ற கலைச்சொல் அல்ல. பொதுவாக குறை மாழைகள் என்னும் குழுவில் உள்ள தனிமங்கள், அலுமினியம், காலியம், இண்டியம், வெள்ளீயம், தாலியம், ஈயம், பிஸ்மத் ஆகும். ஆனால் ஒரோவொருக்கால் ஜெர்மானியம், ஆண்ட்டிமனி, பொலோனியம் ஆகிய தனிமங்களும் சேர்த்துக் கூறுவதுண்டு. ஆனால் பின் கூறியவை பெரும்பாலும் மாழையனை (மாழை போலவன) என்னும் குழுவைச் சேர்ந்தவை.
13 | 14 | 15 | 16 | 17 |
---|---|---|---|---|
B போரான் |
C கரிமம் |
N நைட்ரஜன் |
O ஆக்ஸிஜன் |
F ஃவுளூரின் |
Al அலுமினியம் |
Si சிலிக்கான் |
P பாஸ்பரஸ் |
S கந்தகம் |
Cl குளோரின் |
Ga காலியம் |
Ge ஜெர்மானியம் |
As ஆர்சனிக் |
Se செலீனியம் |
Br புரோமின் |
In இண்டியம் |
Sn வெள்ளீயம் |
Sb ஆண்ட்டிமனி |
Te டெலூரியம் |
I அயோடின் |
Tl தாலியம் |
Pb ஈயம் |
Bi பிஸ்மத் |
Po பொலோனியம் |
At அஸ்ட்டாட்டைன் |
உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள்[தொகு]
The Chemistry Student's Companion, Stephen Schaffter, Lulu Press, Inc 2006 ISBN 1-4116-9247-0
வெளி இணைப்புகள்[தொகு]
தனிம அட்டவணை | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | ||||||||||||||||
1 | H | He | |||||||||||||||||||||||||||||||
2 | Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||
3 | Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||
4 | K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||
5 | Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||
6 | Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |
7 | Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
|