பேச்சு:குறை மாழை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வா, உலோகம் என்பது தமிழ்ச் சொல் இல்லையா? உலோகம் என்பதே பரவலாக இலங்கையிலும் தமிழகத்திலும் உபயோகிக்கப்படுகிறது. அதைவிடுத்து இன்னுமொரு தமிழ்ச்சொல்லின் அவசியம் என்ன?--Kanags 23:37, 28 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கனகு, உலோகம் தமிழ்ச்சொல் இல்லை. வளராமல், தொடர்புகொள்ளாமல் தனித்து நிற்கும் சொல். கூடவே உலோகம் என்பதையும் குறித்து வரலாம். மாழை என்னும் கட்டுரையைப் பாருங்கள். தமிழ்நாட்டு பாட நூல்களில் பலவிதமாக சொற்கள் ஆளப்படுகின்றன. அவற்றையும், இலங்கை பாடநூல் சொற்களையும் அரவணைத்தே செல்வோம். எடுத்துக்காட்டாக electrical charge என்பதற்கு மின்சுமை என்று இருப்பதைப் பார்கலாம். முன்னர் மின்னேற்றம் என்றனர் (நாங்கள் 1970களில் ஆண்ட சொல்). நேர்மின்சுமை, எதிர்மின்சுமை என்று இப்பொழுது ஆள்கின்றனர். மின்->மின்மம் என்பது எளிதானது. எலக்ட்ரான் என்று ஆள்கின்றனர். இதில் எனக்கு ஓர் எதிர்ப்பும் இல்லை, அப்படியே ஆளலாம். ஆனால் பல இடங்களில் எலக்ட்ரானை மின்னணு என்றும் குறித்துள்ளனர். இது தவறு. மின்னணு என்பது ion ஆகும். பாடநூல்களில் பாராட்ட வேண்டியன பல இருந்தாலும், திருத்தவேண்டியதை திருத்த வேண்டும். சில தமிழ்நாட்டு பாடநூல்களில் பூஜ்ஜியம் என்றும் சுழி என்றும் இரண்டு சொற்களையும் ஆண்டுள்ளனர். மாழை என்ற சொல் தஞ்சை பல்கலைக்கழக கலைச்சொல் அகராதியில் இருப்பதாக அண்மையிலும் படித்தேன் (நான் பார்க்கவில்லை).--செல்வா 00:13, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி செல்வா.--Kanags 00:42, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

அண்மையில் இணைய மடற்குழுவொன்றில், ஜெயபாரதி அவர்கள் பரிபாடலில் zero என்பதற்குத் தமிழில் பாழ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினார்கள். குறிப்பிட்ட பாடலைத் தகவலுக்காக இங்கு இடுகிறேன்.
பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை!

Mayooranathan 06:19, 29 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறை_மாழை&oldid=1537440" இலிருந்து மீள்விக்கப்பட்டது