இம்மியப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்மியப் பொருள் (Trace Element) என்பது ஒரு குறிப்பிட்ட பொருளில் மிக மிகச் சிறிதளவே உள்ள வேற்றுப்பொருளைக் குறிக்கும். அளவீட்டு வேதியியலில் ஒரு வேற்றுப்பொருளின் சராசரி அடர்த்தி, அது இருக்கும் பொதுப் பொருளில் ஒரு கிராமுக்கு 100 மைக்ரோ கிராம் இருந்தால் அதனை இம்மியப்பொருள எனப்படும். வேறு விதமாக கூறுவதென்றால் B என்னும் ஒரு பொருளில் உள்ள 1 மில்லியன் அணுக்களுக்கு, A என்னும் பொருளின் 100 அணுக்கள் இருந்தால், A என்னும் பொருளை இம்மியப்பொருள் என்பர்.

உயிர்வேதியியலில் ஓர் உயிரினம் சரிவர வளர்ச்சி பெற்று உயிர்வாழ்வதற்குத் தேவைப்படும், அடிப்படையான, ஆனால் மிக மிகச் சிறிதளவே தேவைப்படும் ஒரு பொருளை இம்மியப் பொருள் அல்லது இம்மிய ஊட்டுப்பொருள் அல்லது நுண்ணிய ஊட்டுப்பொருள் என்பர்.

புவிவேதியியலில், கனிமங்களைப் பற்றி கூறும் பொழுது, ஒரு மில்லியன் பங்கில் 1000 பங்குக்கும் குறைவாக இருந்தால், அதாவது 0.1 % க்கும் குறைவாக இருந்தால் அதனை இம்மியப்பொருள் என்பர்.

எனவே இம்மியப்பொருள் என்பது துறைதோறும் சற்று மாறுபடும் பொருள் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மியப்_பொருள்&oldid=2761063" இருந்து மீள்விக்கப்பட்டது