உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம்(III) கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம்(3+);முக்கார்பனேட்டு
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) கார்பனேட்டு
இனங்காட்டிகள்
38245-38-4 Y
ChemSpider 188213 Y
EC number 628-324-3
InChI
  • InChI=1S/3CH2O3.2Nd.H2O/c3*2-1(3)4;;;/h3*(H2,2,3,4);;;1H2/q;;;2*+3;/p-6
    Key: CZXBEKQIOBCHSG-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 217202
  • C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].C(=O)([O-])[O-].O.[Nd+3].[Nd+3]
பண்புகள்
Nd2(CO3)3
வாய்ப்பாட்டு எடை 468.53
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H335, H319
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(III) ஆக்சைடு, நியோடிமியம்(III) ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
சமாரியம்(III) கார்பனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(III) கார்பனேட்டு (Neodymium(III) carbonate) என்பது Nd2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பில் நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் கார்பனேட்டு -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகிறது. நீரற்ற வடிவம் ஊதா-சிவப்பு நிறத்திலும்[1] எண்ணிரேற்று இளஞ்சிவப்பு நிறத்தில் திண்மநிலையிலும் காணப்படுகிறது.[2] இந்த இரண்டு உப்புகளும் தண்ணீரில் கரைவதில்லை.[3]

தயாரிப்பு[தொகு]

நியோடிமியம்(III) ஐதராக்சைடும் கார்பன் டை ஆக்சைடும் சேர்ந்து வினைபுரிவதால் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாகும்.

2Nd(OH)3 + 3CO2 → Nd2(CO3)3 + 3H2O

அனிலினில் உள்ள நியோடிமியம்(III) குளோரைடு கரைசல் வழியாக அழுத்தத்தின் கீழ் கார்பனீராக்சைடை செலுத்துவதன் மூலமும் நியோடிமியம்(III) கார்பனேட்டை தயாரிக்க முடியும். :

2NdCl3 + 3CO2 + 6C6H2NH2 + H2O → Nd2(CO3)3 + 6C_6H_5NH_2·HCl

நியோடிமியம்(III) குளோரோ அசிட்டேட்டை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் நியோடிமியம்(III) கார்பனேட்டு தயாரிக்கலாம்:[3]

2Nd(C2Cl3O2)3 + 3H2O → Nd2(CO3)3 + 6CHCl3 + 3CO2

நியோடிமியம்(III) குளோரைடுடன் நீரில் கரைக்கப்பட்ட அம்மோனியம் பைகார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாகும்.[4]

பண்புகள்[தொகு]

வேதிப் பண்புகள்[தொகு]

நியோடிமியம்(III) கார்பனேட்டு அமிலங்களில் கரைந்து கார்பனீராக்சைடை வெளியிடுகிறது:

Nd2(CO3)3 + 6H+ → 2Nd3+ + 3H2O + 3CO2

அமிலங்களுடன் வினைபுரிந்து பல உப்புகளையும் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாக்கும். :

H+ + Nd2(CO3)3 → Nd + H2O + CO2

எடுத்துக்காட்டாக அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து நியோடிமியம் அசிட்டேட்டு உப்பை உருவாக்குகிறது:

6CH3COOH + 2Nd2(CO3)3 → 2Nd(CH3COO)3 + 3H2O + 3CO2

அமோனியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு, பொட்டாசியம் கார்பனேட்டு மற்றும் பிற உப்புகளுடன் சேர்ந்து நியோடிமியம்(III) கார்பனேட்டு அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. வாலைவடி நீரைக் காட்டிலும் நீர்க்கரைசலில் இவற்றின் கரைதிறன் நன்றாக வெளிப்படுகிறது. சூடுபடுத்தினால் இவ்வுப்பை நியோடிமியம்(III) ஆக்சைடு போன்ற வேறு உப்பாகவும் மாற்ற முடியும்.[5] ஐதரசீன் சேர்மத்துடன் வினைபுரிந்து Nd2(CO3)3·12N2H4·4H2O என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. இது ஓர் ஒளிபுகும் படிகமாகும். இப்படிகம் தண்ணீரில் சிறிதளவு கரையும். பென்சீனில் கரையாது. d20°C = 1.96 கி/செ.மீ3 என்பது இதன் கரைதிறன் அளவாகும்.[6]

இயற்பியல் பண்புகள்[தொகு]

நியோடிமியம்(III) கார்பனேட்டு படிகங்களாக உருவாகிறது.Nd2(CO3)3·n H2O என்ற பொது வாய்பாட்டிலான படிக நீரேற்று இதன் உட்கூறாக இருக்கும். வாய்பாட்டிலுள்ள n = 2.5 மற்றும் 8 வரை மாறுபடும். நியோடிமியம்(III) கார்பனேட்டு தண்ணீரில் கரையாது.[2]

பயன்[தொகு]

நியோடிமியம்(III) கார்பனேட்டை சீரொளிகள், கண்ணாடிகளுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் மின்கடத்தா பொருள்களில் பயன்படுத்த முடியும்[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rare earth elements: Main volume, Phần 3 (Leopold Gmelin; Verlag Chemie, 1994), page 22; 68. Retrieved 4 February 2021.
  2. 2.0 2.1 Handbook… (Pierre Villars, Karin Cenzual, Roman Gladyshevskii; Walter de Gruyter GmbH & Co KG, 24 thg 7, 2017 - 1970 pages), page 999. Retrieved 4 February 2021.
  3. 3.0 3.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 黄春晖 等编.科学出版社. tr. 174, 碳酸盐.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-030574-9
  4. 黄婷. 碳酸钇、碳酸钕的结晶及相关技术研究[J]. 《南昌大学》.2005年
  5. 5.0 5.1 "Neodymium Carbonate".
  6. Uchenye zapiski: Serii︠a︡ khimicheskikh nauk (S.M. Kirov adyna Azărbai̐jan Dȯvlăt Universiteti; 1975). Retrieved 7 February 2021.