பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
5895-45-4 14948-62-0 | |
EC number | 227-578-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165369 |
| |
பண்புகள் | |
Pr2(CO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 461.849 (நீரிலி) 605.977 (எண்ணீரேற்று) |
தோற்றம் | பச்சை படிகங்கள் (எண்ணீரேற்று) [1] |
கரையாது. (1.99×10−6மோள்/லி) [2] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம்(III) குளோரோ அசிட்டேட்டு பிரசியோடைமியம்(III) சல்பேட்டு பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) கார்பனேட்டு நியோடிமியம் கார்பனேட்டு. |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு (Praseodymium(III) carbonate) என்பது Pr2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிலி நிலையில் காணப்படும் இச்சேர்மம் ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.[3] பிரசியோடைமியத்தின் எழுநீரேற்று, எண்ணீரேற்றுகளும் அறியப்படுகின்றன. இவை அனைத்தும் தண்ணீரில் கரையாதவைகளாகும்.[2]
பிரசியோடைமியம்(III) குளோரோ அசிட்டேட்டை நீராற்பகுப்பு செய்து பிரசியோடைமியம்(III) கார்பனேட்டை தயாரிக்கலாம். :[2][4]
- 2 Pr(C2Cl3O2)3 + 3 H2O → Pr2(CO3)3 + 6 CHCl3 + 3 CO2
கார்பன் டை ஆக்சைடுடன் நிறைவுற்ற சோடியம் பைகார்பனேட்டை பிரசியோடைமியம் குளோரைடு கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்.[4]
வேதிப்பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு அமிலங்களுடன் வினைபுரியும். இவ்வினையின் போது கார்பனீராக்சைடு வெளியிடப்படுகிறது.:[5]
- Pr2(CO3)3 + 6 H+ → 2 Pr3+ + 3 H2O + 3 CO2↑
இது தண்ணீரில் கரையாது. [2]
பிற சேர்மங்கள்
[தொகு]பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு ஐதரசீனுடன் வினைபுரிந்து வெளிர் பச்சைநிறப் படிகங்களான Pr2(CO3)3•12N2H4•5H2O என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. தண்ணீரில் இது சிறிதளவு கரையும் ஆனால் பென்சீனில் கரையாது. 20°செல்சியசு வெப்பநிலையில் இதன் அடர்த்தி 1.873 கி/செ.மீ3.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 《化学化工物性数据手册》 (无机卷) . 化学工业出版社. P320. 7.2 碳酸盐. ISBN 7-5025-3591-8
- ↑ 2.0 2.1 2.2 2.3 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 黄春晖 等编.科学出版社. P174. 碳酸盐. ISBN 978-7-03-030574-9
- ↑ Rare earth elements: Main volume, Phần 3 (Leopold Gmelin; Verlag Chemie, 1994), page 22; 68. Retrieved 4 Feb 2021.
- ↑ 4.0 4.1 冯天泽. 稀土碳酸盐的制法、性质和组成. 《稀土》. 1989年第3期. pp.45~49
- ↑ PubChem. "Praseodymium Carbonate Octahydrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
- ↑ Uchenye zapiski: Serii︠a︡ khimicheskikh nauk (S.M. Kirov adyna Azărbai̐jan Dȯvlăt Universiteti; 1977), page 37. Retrieved 7 Feb 2021.