மரைனர் 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரினர் 10 ஐ கௌரவப்படுத்த 1975இல் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்ட அஞ்சல் தலை

மாரினர் 10 (Mariner 10) என்பது 03.11.1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள் ஆகும். இது வெள்ளி மற்றும் புதனை ஆராயும் பொருட்டு ஏவப்பட்டது. புதனை நெருங்கிய முதல் விண்கலம் இதுவே. இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45 விழுக்காடு வரை படமெடுத்தது. தற்போது இது செயல்பாட்டில் இல்லை. எனினும் இது சூரியனைச் சுற்றி வந்து கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரைனர்_10&oldid=3129720" இலிருந்து மீள்விக்கப்பட்டது