கோள்களின் கருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவிக்கு சமமான கோள்களின் கருவப்பகுதி.

கோள்களின் கருவம் (planetary core) என்பது கோள்களின் மிக உள்ளார்ந்த பகுதிகளை குறிக்கும் பகுதி ஆகும். கோள்களின் கருவம் சில கோள்களில் திரவ நிலைப் பகுதிகளையும், திட நிலைப்பகுதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாய் மற்றும் வெள்ளியின் கருவம் அவற்றின் உட்பகுதியிலேயே உருவாகக்கூடிய காந்தப் புலம் குறைவாக உள்ளதால் முழுமையும் திட நிலையில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1] நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் கருவத்தின் அளவு ஒரு கோளின் ஆரத்தின் 25% (இயற்கைத் துணைக்கோள்கள்) முதல் 85% (புதன்) வரை ஆக அமைந்துள்ளது.

வளிமப் பெருங்கோள்களின் (gas giants) கருவங்களில் இரும்பு மிகுதியாகக் காணப்படுகிறது.[2] வளிமப் பெருங்கோள்களின் மொத்த நிறையுடன் ஒப்பிடுகையில் இவற்றின் கருவம் சிறிய அளவே இருந்தாலும், உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள கோள்களின் (Terrestrial planets) கருவத்தை விட இவை பெரியவை. வியாழனின் கருவம் புவியின் கருவத்தை விட 12 மடங்கு நிறையுடையது (வியாழனின் மொத்த நிறையில் 3%). புறக்கோள் எச்டி 149026 பி புவியின் கருவத்தை விட 70வது மடங்கு நிறையுடையது.

சில கோள்களின் நிலாக்களிலும் மற்றும் சிறுகோள்களிலும் அதன் அளவு மற்றும் உருவான விதத்தைப் பொருத்து வேறுபட்ட கருவங்களைக் கொண்டுள்ளது.

வியாழனின் ஐரோப்பா மற்றும் ஐஓ ஆகிய இயற்கைத் துணைக்கோள்கள் கணிசமான விட்ட அளவுள்ள திட கருவத்தைப் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோள்களின்_கருவம்&oldid=3731644" இருந்து மீள்விக்கப்பட்டது