காந்தக்கோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் காந்தக்கோளம்

காந்தக்கோளம் (Magnetosphere) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் வான்பொருள் ஒன்றைச் சூழ்ந்து காணப்படும் வெற்றிடமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் ஏற்றம் பெற்ற பொருட்கள், குறித்த வான்பொருளினால் தன்னகத்தே ஈர்க்கப்பட்டு அவ்வான் பொருளின் காந்தப்புலத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[1][2] வான்பொருள்களுக்கு அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்மாவினால், வான்பொருளின் காந்தப்புலக் கோடுகள் மின் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகலாம் (குறிப்பாக சூரியப்புயல் போன்றவற்றால்).[3][4] 1600 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆங்கிலேய வானியலாளரும் பௌதீகவியலாளருமான வில்லியம் கில்பேர்ட் புவியின் காந்தப்புலத்தினைக் கண்டறிந்ததில் இருந்து காந்தக்கோளம் பற்றிய ஆராய்ச்சிகளும், கல்விமுறையும் ஆரம்பமாகின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தக்கோளம்&oldid=2747495" இருந்து மீள்விக்கப்பட்டது