உள்ளடக்கத்துக்குச் செல்

வானியல்சார் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Asteroid Ida with its own moonMimas, a natural satellite of Saturn
Planet Jupiter, a gas giant
The Sun, a G-type starStar Sirius A with white dwarf companion Sirius B
Black hole (artist's animation)Vela pulsar, a rotating neutron star
Globular star clusterPleiades, an open star cluster
The Whirlpool galaxyAbel 2744, Galaxy cluster
The Hubble Ultra-Deep Field 2014 image with an estimated 10,000 galaxiesMap of galaxy superclusters and filaments
வானியல்சார் பொருட்கள் சில காட்டப்பட்டுள்ளது.
லா சில்லா வானாய்வகத்தின் மேலே சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வானியல்சார் பொருட்களைக் காணலாம் — வியாழன் (மேலே), செவ்வாய் (கீழ் இடது), புதன் (கீழ் வலது).[1]

வானியல்சார் பொருள் (Astronomical object) என்பது வானியலில் ஆயப்படுவனவாகும். இது இயற்கையில் உருவான காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள எந்தப் பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம்.[2] புவியிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. இது ஏதோ ஒரு ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டு, தொடர்ச்சியாக வான்வெளியில் அமைந்துள்ள பொருட்களையும், ஈர்ப்பு விசை குறைந்த வானியல் அமைப்புகளையும் மற்றும் துணை அமைப்புகளையும் குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக கோள்களின் அமைப்புகள், விண்மீன் கொத்துகள், நெபுலா, விண்மீன் பேரடை, சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள் , விண்மீன், வால்வெள்ளி என்பது கட்டமைப்புக்குட்பட்ட பனிக்கட்டி மற்றும் தூசி ஆகியவற்றால் ஆன வால்வெள்ளி உட்கோளமும், கட்டமைப்புக்கு உட்படாத வால்வெள்ளியின் வால் பகுதியையும் கொண்டுள்ளது.

கோள்களின் அமைப்புகள் என்பது விண்மீன்களைச் சுற்றி கோள்கள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் குறிப்பதாகும். விண்மீன் கொத்துகள் என்பது விண்மீன்கள் ஈர்ப்பு விசையால் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகும். நெபுலா என்பது விண்மீன் பேரடை வெடிப்பின் மூலம் உண்டாகிறது, இதிலிருந்து புதிய விண்மீன்களும், புதிய கோள்களும் உருவாகின்றன. சிறுகோள், இயற்கைத் துணைக்கோள், கோள், வால்வெள்ளி ஆகியவை, நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள வானியல் சார் பொருட்கள் ஆகும். இதில் கோள்கள், சிறுகோள், வால்வெள்ளி ஆகியவை சூரியனைச் சுற்றியும், இயற்கைத் துணைக்கோள் கோள்களைச் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.

விண்மீன் கொத்துகள்

[தொகு]

அண்டம் என்பது படிநிலை முறை கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது.[3] விண்மீன் பேரடைகள், விண்மீன் பேரடைக் கூட்டங்கள் மற்றும் விண்மீன் பெருந்திரள் ஆகிய இரண்டு பிரிவுகளாக உள்ளது.[4] விண்மீன் பேரடைகள் அதன் அமைப்பைப் பொறுத்து ஒழுங்கில்லா விண்மீன் பேரடை, நீள்வட்ட அண்டம் (Elliptical galaxy), வட்டத்தட்டு விண்மீன் பேரடை (Disc galaxy) போன்ற சில பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[5] வட்டத்தட்டு விண்மீன் பேரடையானது ஒடுக்க உருவ அண்டம் (lenticular galaxy) மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் (spiral galaxies) என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விண்மீன் பேரடைகளின் மையத்தில் மீப்பெரும் கருந்துளை இருக்கும். குறு ஒளிர்வண்டம் மற்றும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஆகியவை விண்மீன் பேரடைகளைச் சுற்றி அமைந்திருக்கும்.[6]

விண்மீன் கொத்துகளின் உள்ளமைப்பு

[தொகு]

விண்மீன் கொத்துகள், வாயுப் பொருட்களால் ஆனவை, இவைப் படிப்படியாக தானே ஈர்ப்பு விசையை பெறும் அளவிற்கு உருவாகிறது. இந்த நிலையில் விண்மீன்களே அவற்றின் அடிப்படைப் பொருளாக உள்ளது. குளிர்வடையும் நெபுலாக்களிலிருந்து உருவாக்கப்பட்டு கூட்டமாய் சேர்ந்து விண்மீன் கொத்துகளை உருவாக்குகிறது.[7]

விண்மீன்களின் நிறை, பொதிவு, மற்றும் வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பொறுத்து விண்மீன் கொத்துகளின் அமைப்பு உருவாகிறது. ஒரு படிப்படியாக உருவாகும் கூட்டமைப்பில், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்ப்பின் மூலம் சுற்றி வருகின்றன. கோள்கள், சிறுகோள்கள், துணைக் கோள்கள் மற்றும் தூசி ஆகியவை புதிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. விண்மீன்களின் ஒளிர்வு மற்றும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து வரையப்படும் ஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம், விண்மீன்களை வகைப்படுத்தப் பயன்படுகிறது. மாறுபடும் விண்மீன் என்பது மாறுபடும் ஒளிர்வைக் கொண்ட விண்மீன் அமைப்பாகும்.[8] வெண் குறுமீன், நொதுமி விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவை விண்மீன்களின் இறுதி நிலை விண்மீன் அமைப்பாகும்.

அமைவிடத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகள்

[தொகு]
தொடர்புடைய கட்டுரைகள்: வானியல் பொருட்களின் பட்டியல்கள்

அமைவிடம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுப்புகளின் பட்டியல்.

சூரியப் பொருட்கள் சூரிய வெளியைத் தாண்டியுள்ள பொருட்கள்
சிறியப் பொருட்கள் கூட்டுப் பொருட்கள்
  • மிகப் பெரியக் கோள்கள்
  • சூரியன்சூழ் வான்மண்டலம்
  • ஓர்ட் மேகம்

(வால் விண்மீன் கூட்டம்)

பொருட்கள்

  • சூரியக் குடும்பத்திலுள்ள

சிறிய பொருட்கள்

துணைக்கோள்கள்

துணைக்கோள்கள்

துணைக்கோள்கள்

– நெப்டியூனின் நிலவுகள்

புளூட்டோவின் நிலாக்கள்

சிறு கோள்கள்
  • பழுப்புக் குறுமீன் வகைகள்
    • M  · L  · T  · Y
  • முகிழ் மீன் (Protostar)
  • இளைய விண்மீன்கள்
(Young stellar object)
  • முதன்மைக்கு முன்

ஒளிர்வுப்பட்டை விண்மீன்

  • முதன்மை ஒளிர்வுப்பட்டை

விண்மீன்

/ நீலப் பேரரக்கன்
விண்மீன் வகைகள்
  • O (நீலம்)
  • B (வெளிர் நீலம்)
  • A (வெள்ளை)
  • F (வெளிர் மஞ்சள்)
  • G (மஞ்சள்)
  • K (செம்மஞ்சள்)
  • M (சிவப்பு)
அமைப்புகள்
விண்மீன் குழுக்கள்
விண்மீன் பேரடை
  • விண்மீன் பேரடை
  • விண்மீன் பேரடை குழுக்கள்
  • விண்மீன் பெருந்திரள்
  • விண்மீன் பேரடை அமைப்பு
    • சுருள் விண்மீன் பேரடை
    • ஒடுக்க உருவ அண்டம்
    • நீள்வட்ட விண்மீன் பேரடை
    • வளைய விண்மீன் பேரடை
    • ஒழுங்கற்ற விண்மீன் பேரடை
  • விண்மீன் பேரடை அளவு
  • வகை
  • விண்மீன் வெடிப்பு பேரடை
  • இருள் விண்மீன் பேரடை

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Three Planets Dance Over La Silla". ESO Picture of the Week. http://www.eso.org/public/images/potw1322a/. பார்த்த நாள்: 5 June 2013. 
  2. Task Group on Astronomical Designations from IAU Commission 5 (April 2008). "Naming Astronomical Objects". International Astronomical Union (IAU). Archived from the original on 2 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 July 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. Narlikar, Jayant V. (1996). Elements of Cosmology. Universities Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7371-043-0.
  4. Smolin, Lee (1998). The life of the cosmos. Oxford University Press US. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-512664-5.
  5. Buta, Ronald James; Corwin, Harold G.; Odewahn, Stephen C. (2007). The de Vaucouleurs atlas of galaxies. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82048-0.
  6. Astronomical Objects for Southern Telescopes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521318874. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  7. Elmegreen, Bruce G.(January 2010). "The nature and nurture of star clusters". Star clusters: basic galactic building blocks throughout time and space, Proceedings of the International Astronomical Union, IAU Symposium, 3–13. DOI:10.1017/S1743921309990809.
  8. Hansen, Carl J.; Kawaler, Steven D.; Trimble, Virginia (2004). Stellar interiors: physical principles, structure, and evolution. Astronomy and astrophysics library (2nd ed.). Springer. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-20089-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்சார்_பொருள்&oldid=3670431" இலிருந்து மீள்விக்கப்பட்டது