பெர்கமோன் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெர்கமேன் அருங்காட்சியகம்
அருங்காட்சியகத் தீவு, பெர்லின், ஜெர்மனி
பெர்கமோன் அருங்காட்சியகம் is located in Berlin
பெர்கமோன் அருங்காட்சியகம்
Location within Germany Berlin central # Germany
பெர்கமோன் அருங்காட்சியகம் is located in Germany
பெர்கமோன் அருங்காட்சியகம்
பெர்கமோன் அருங்காட்சியகம் (Germany)
நிறுவப்பட்டது 1930
அமைவிடம் பெர்கமோன் அருங்காட்சியகம்
10117, அருங்காட்சியகத் தீவு, பெர்லின், ஜெர்மனி
வகை கலை மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள்
வருனர்களின் எண்ணிக்கை

1.1 மில்லியன் (2007)

  • தேசிய அளவில் முதலிடம்
  • உலக அளவில் 39-வது இடம்
Public transit access பிரடெரிக் ஸ்டிராபே U-Bahn.svg Berlin U6.svg
வலைத்தளம் Website
பெர்கோமேன் அருக்காட்சியகத்தின் முகப்பு மேடை

பெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (இடாய்ச்சு: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் 1930-இல் துவக்கப்பட்டது.[1]

இவ்வருங்காட்சியகத்தில் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன், உரூக், அசூர், பண்டைய எகிப்து, நினிவே நகரங்களில் அகழ்வாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள்து.

இவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்களில் புகழ்பெற்றவைகள் , கிமு 575 ஆண்டில் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில், பாபிலோனின் சிங்கம், சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரிய மொழியில் கிமு 2100-இல் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியம், அனதோலியாவின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் மெலிட்டஸ் வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் உதுமானியப் பேரரசின் சத்தா அரண்மனை முகப்பு ஆகும்.

அருங்காட்சியகத்தின் தொல் நினைவுச்சின்னங்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Pergamonmuseum, Berlin, Germany

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]