பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை என்பது பண்டைக் காலத்தில் இன்றைய கிரீஸ் நாட்டுப் பகுதியில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். எனினும், இப்பகுதியின் 2 ஆவது ஆயிரவாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட கட்டிடக்கலை கிரேக்க மொழியினர் சார்ந்தது அல்ல. இதற்குப் பின் சுமார் கிமு 1000 ஆண்டு வரை இப் பகுதிகளில் பஞ்சமும், பொருளாதார வீழ்ச்சி நிலையும் நிலவியது. கிமு 1000 ஆவது ஆண்டுக்குப் பின்னர் சிறப்பாக கிமு 8 ஆவது நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைத் தொடர்ந்தே கிரேக்கக் கட்டிடக்கலைப் பாணி அறிமுகமானது.
கட்டிடக்கலை ஒழுங்குகள்
[தொகு]இக்காலத்தில், கட்டிடங்களின், தூண்கள், வளைகள், முகப்புகள் முதலிய கூறுகளை அமைப்பதிலும், அழகூட்டுவதிலும் ஒழுங்குகள் ஏற்பட்டன. கிரேக்கக் கட்டிடக்கலையில் இவ்வாறான மூன்று ஒழுங்குகள் பயன்பாட்டில் இருந்தன. இவை, டோரிய ஒழுங்கு, அயனிய ஒழுங்கு, கொறிந்திய ஒழுங்கு எனப்பட்டன. இவ்வொழுங்குகளுக்கான எண்ணக்கருக்கள் இதற்கு முற்பட்ட எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியப் பகுதிகளில் நிலவிய கட்டிடக்கலைப் பாணிகளில் இருந்து பெறப்பட்டவையாகும். இந்த ஒழுங்குகளுள் டோரிக் ஒழுங்கே மிகப் பழமையானது.
கட்டிடப் பொருட்கள்
[தொகு]கிரேக்கத் தலைநிலத்தில் மரங்கள் மிகவும் அரிதாகவே கிடைத்தன. முக்கியமான கட்டிடங்களுக்குத் தேவையான தரமான மரங்கள் வேறிடங்களிலிருந்தே கொண்டுவரப்பட்டன. ஆனால் தரமான சுண்ணக் கற்களும், சலவைக் கற்களும் கிடைத்தன. இவை கட்டிட வேலைகளுக்கு உகந்தவையாக அமைந்தன. இக் கற்களின் பயன்பாடு கிரேக்கக் கட்டிடக்கலைக்குத் தனித்துவத்தைக் கொடுத்தன எனலாம்.
கட்டிடங்கள்
[தொகு]கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கு முன் இப்பகுதிகளில் சமயச் சார்புள்ள கோயில்கள் போன்ற கட்டிடங்கள் காணப்படவில்லை. எனினும், இதற்குப் பின்னர் வளர்ச்சி பெற்ற கிரேக்கக் கட்டிடக்கலையில் கோயில்கள் முக்கிய இடத்தை வகித்தன. எளிமையான கிரேக்கக் கோயில்கள் பொதுவாகச் செவ்வக வடிவமானவையும், கடவுள் சிலைகளை வைப்பதற்குரிய ஒரு அறையைக் கொண்டவையாகவும் அமைந்திருந்தன. பக்கச் சுவர்களை முன்புறம் சிறிது நீட்டி உருவாக்கப்பட்ட இடப்பகுதியின் திறந்திருந்த முன் பக்கத்தில் கட்டிடத்தின் அளவுக்கு ஏற்றவகையில் வேறுபட்ட எண்ணிக்கைகளில் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை பொதுவாக 2, 4, 6, 8, 10 என இரட்டை எண்ணிக்கைகள் கொண்டனவாக இருந்தன. மிகவும் அரிதாகத் தொடக்ககாலக் கட்டிடங்களில் ஒற்றை எண்ணிக்கைகளிலான தூண்களையும் காண முடியும். கோயில்களின் சிக்கல் தன்மை மேலும் வளர்ச்சியடைந்த போது இக் கருவறையைச் சுற்றி நாற்புறமும் தூண் வரிசைகள் அமைக்கப்பட்டன.
புத்தக விவரணம்
[தொகு]- John Boardman, Jose Dorig, Werner Fuchs and Max Hirmer, ‘’The Art and Architecture of Ancient Greece’’, Thames and Hudson, London (1967)
- Banister Fletcher, A History of Architecture on the Comparative method (2001). Elsevier Science & Technology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-2267-9.
- Helen Gardner; Fred S. Kleiner, Christin J. Mamiya, Gardner's Art through the Ages. Thomson Wadsworth, (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-505090-7.
- Michael and Reynold Higgins, A Geological Companion to Greece and the Aegean, Cornell University Press, (1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-3337-5
- Marian Moffett, Michael Fazio, Lawrence Wodehouse, A World History of Architecture, Lawrence King Publishing, (2003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85669-353-8.
- Donald E. Strong, The Classical World, Paul Hamlyn, London (1965)
- Henri Stierlin, Greece: From Mycenae to the Parthenon, Taschen, 2004
- Marilyn Y. Goldberg, “Greek Temples and Chinese Roofs,” American Journal of Archaeology, Vol. 87, No. 3. (Jul., 1983), pp. 305–310
- Penrose, F.C., (communicated by ஜோசப் நார்மன் இலாக்கியர்), The Orientation of Geek Temples, Nature, v.48, n.1228, May 11.
- Örjan Wikander, “Archaic Roof Tiles the First Generations,” Hesperia, Vol. 59, No. 1. (Jan. - Mar., 1990), pp. 285–290
- William Rostoker; Elizabeth Gebhard, “The Reproduction of Rooftiles for the Archaic Temple of Poseidon at Isthmia, Greece,” Journal of Field Archaeology, Vol. 8, No. 2. (Summer, 1981), pp. 211–2