புதுமைக்கால வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுமைக்கால வரலாறு (Modern history) அல்லது புதுமைக் காலம், தொன்மைக்கு அடுத்த காலத்திற்கு ( post-classical era) (ஐரோப்பாவில் நடுக்காலம்) அடுத்துள்ள காலக்கோட்டிற்கு வரலாற்றியல்படியான வரையறைச் சொல்லாகும்.[1][2] புதுமைக்கால வரலாற்றையும் துவக்க புதுமைக்காலம் என்றும் பிரெஞ்சுப் புரட்சியும் தொழிற்புரட்சியும் கழிந்த பிறகான பிந்தைய புதுமைக்காலம் என்றும் பிரிக்கலாம். தற்போது நிகழ்காலத்திற்கு நெருங்கிய தொடர்புள்ள வரலாற்று நிகழ்வுகள் சமகால வரலாறு எனப்படுகின்றன. புதுமைக்காலம் ஏறத்தாழ 16ஆவது நூற்றாண்டில் துவங்கியது.[3]

புதுமைக் காலம்[தொகு]

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்[தொகு]

புதுமைக் காலத்தில் அறிவியல், அரசியல், போர்முறை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. இதுவே கண்டுபிடிப்புக் காலமாகவும் உலகமய காலமாகவும் விளங்கியது. இக்காலத்தில் ஐரோப்பிய அதிகார மையங்களும் பின்னாளில் அவர்களது குடியேற்ற நாடுகளும் ஏனைய உலகின் பகுதிகளில் அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டு குடிமைப் படுத்தலை நிகழ்த்தினர்.

பிந்தைய 19ஆவது, 20ஆவது நூற்றாண்டுகளில், மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு நாகரிகமிக்கப் பகுதியிலும் நவினவிய கலை, அரசியல், அறிவியல் மற்றும் பண்பாடு மேல்நிலை பெற்றன. மேற்கத்திய மற்றும் உலகமயத்திற்கு எதிரான இயக்கங்களும் வலுப்பெற்றன. புதுமைக்காலம் முதலாளித்துவம்,[4] நகராக்கம்[5] தனிமனிதத்துவ [5] முன்னெடுத்தலில் நெருங்கிய தொடர்புடையது; தொழில்நுட்ப, அரசியல் முன்னேற்றங்களுக்குள்ள வாய்ப்புக்களில் நம்பிக்கை உடையது.[6][7]

பெரும் மாற்றங்கள் காரணமாக எழுந்த கொடூரப் போர்களும் மற்ற பிரச்சினைகளும் மரபுசார் சமய, நன்னெறி முறைகள் வலிவிழந்தமையும் புதுமைக்கால முன்னேற்றங்களுக்கு எதிரான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன.[8][9] தொடர்ந்த முன்னேற்றத்தில் உள்ள ஆர்வ மனப்பாங்கையும் நம்பிக்கையையும் பின்நவீனத்துவம் கேள்விக்குட்படுத்துகிறது; மற்ற கண்டங்கள் மீதான மேற்கு ஐரோப்பிய மற்றும் ஆங்கில-அமெரிக்க ஆதிக்கங்களை குடிமைப்படுதலுக்குப் பிந்தைய கொள்கைகள் கண்டிக்கின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Intrinsic to the English language, "modern" denotes (in reference to history) a period that is opposed to either ancient or medieval—modern history comprising the history of the world since the close of the Middle Ages.
  2. The Century Dictionary and Cyclopedia, Page 3814
  3. Dunan, Marcel. Larousse Encyclopedia of Modern History, From 1500 to the Present Day. New York: Harper & Row, 1964.
  4. Capitalism and modernity: the great debate by Jack Goody
  5. 5.0 5.1 National, cultural, and ethnic identities: harmony beyond conflict by Jaroslav Hroch, David Hollan
  6. Progress and its discontents American Academy of Arts and Sciences. "Technology and politics." Western Center
  7. A companion to the philosophy of technology by Jan-Kyrre Berg Olsen, Stig Andur Pedersen, Vincent F. Hendricks
  8. Marx, Durkheim, Weber: formations of modern social thought by Kenneth L. Morrison. Page 294.
  9. William Schweiker, The Blackwell companion to religious ethics. 2005. Page 454. (cf., "In modernity, however, much of economic activity and theory seemed to be entirely cut off from religious and ethical norms, at least in traditional terms. Many see modern economic developments as entirely secular.")
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுமைக்கால_வரலாறு&oldid=2769520" இலிருந்து மீள்விக்கப்பட்டது