முள்ளுக்குடி ஊராட்சி
முள்ளுக்குடி | |||||
— ஊராட்சி — | |||||
ஆள்கூறு | |||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] | ||||
ஊராட்சித் தலைவர் | ராணி பாலசந்திரன் | ||||
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை | ||||
மக்களவை உறுப்பினர் |
இரா. சுதா | ||||
சட்டமன்றத் தொகுதி | திருவிடைமருதூர் | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
மக்கள் தொகை | 2,028 | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
முள்ளுக்குடி ஊராட்சி (Mullukudi Gram Panchayat), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் இந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டதில் கடைசி ஊராகும் .இதன் அருகில் மயிலாடுதுறை மாவட்டத்தின் குத்தாலம் அமைந்துள்ளது.முள்ளுக்குடி ஊராட்சியில் உள்ள வேலுரில் கதிராமங்கலம் - பந்தநல்லுரை இணைக்கும் நெடுஞ்சாலை செல்கிறது .இந்த சாலையின் வழியாக திருப்பனந்தாள், வைத்திஸ்வரன்கோவில். கதிராமங்கலம் வனதுர்க்கை கோவிலுக்கு போகலாம். .இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2028 ஆகும். இவர்களில் பெண்கள் 987 பேரும் ஆண்கள் 1041 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 94 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 3 |
கைக்குழாய்கள் | 16 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 9 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 22 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 1 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 5 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | 4 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 45 |
ஊராட்சிச் சாலைகள் | 5 |
பேருந்து நிலையங்கள் | 4 |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 8 |
பஞ்சாயத்து எல்லைகள்:
தெற்கே கதிராமங்கலம்,ஊராட்சியும்,வடக்கே ஆரலூர் கூத்தனூர் ஊராட்சியும்,மேற்கே மயிலாடுதுறை மாவட்டத்தின் வில்லியநல்லூர் அமைந்துள்ளது..
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- முள்ளுக்குடி
முள்ளுக்குடி ஊரானது குத்தாலம்- வேலூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.இத்திருகோயில் திருவாடுதுறை ஆதினம் கீழ் செயல்படுகிறது மற்றும் இந்த ஊரில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.மற்றும் இந்த ஊரில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது.இந்த துணைமின் நிலையத்தில் சுற்று வட்டார கிராம பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
2.ஆற்காடு
ஆற்காடு ஊரானது சேண்டிருப்பு அருகில் அமைந்துள்ளது
3.வேலூர்
வேலூர் ஊர் கதிராமங்கம் - பந்தநல்லூர் சாலையில் அமைந்துள்ளது.இந்த ஊரில் அரசமரம்(பெரிய மதுகு)பேருந்து நிலையம் உள்ளது.இந்த பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை,கும்பகோணம்,சீர்காழி,சிதம்பரம்,குத்தாலம்,ஆடுதுறை,திருப்பனந்தாள்,பந்தநல்லூர் ,திருலோகி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.மற்றும் இந்த ஊரில் மகா மாரியம்மன் ஆலயம் ,காளியம்மன் ஆலயம் சிவன் ஆலயம்,பெருமாள் ஆலயமும் அமைந்துள்து.மாரியம்மன் கோவில் பால்குடம் மற்றும் தீமிதீ திருவிழாவும்,காளியம்மன் கோவில் கரகாட்டமும் வைகாசி மாதத்தில் அதிவிமர்சையாக நடைபெறும்..இந்த ஊரில் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.நெல் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்த ஊரில் பழவாறு ஆறு ஒன்று செல்கிறது.நெல் கொள்முதல் நிலையம் வேலூர் புது ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "திருப்பனந்தாள் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.