துரை சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரை சந்திரசேகரன்
Durai Chandrasekaran
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிதிருவையாறு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
மே 2026 – மே 2021
தொகுதிதிருவையாறு
பதவியில்
2006–2011
பதவியில்
1996–2001
பதவியில்
1989–1991
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருவையாறு, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)திருவையாறு, தஞ்சாவூர்
முன்னாள் கல்லூரிமன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்
பெங்களூர் சட்டக் கல்லூரி, பெங்களூர்
தொழில்வழக்கறிஞர்

துரை சந்திரசேகரன் (Durai Chandrasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல்,[1] 1996 சட்டமன்றத் தேர்தல்,[2] 2006 சட்டமன்றத் தேர்தல்,[3] 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்[4] ஆகிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.

துரை சந்திரசேகரன் 1991 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவை சார்ந்த பி. கலியபெருமாளிடம் தோல்வியடைந்தார். இதன் பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வேட்பாளர் அய்யாறு வாண்டையாரிடம் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி மீது மக்களிடையே ஏற்பட்டிருந்த கடுமையான அதிருப்தியால் அத்தேர்தலில் திமுக சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி இவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தும் போட்டியிடாமல் விலகினார். அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து திமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[5] அதனுடன் சேர்த்து துரை சந்திரசேகரன் தற்போது தஞ்சாவூர் மாவட்ட தெற்கு பகுதி தி.மு.க. செயலாளராக உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1989 திருவையாறு திமுக 36,981 38 வி. சி. சிவாஜிகணேசன் சுயேச்சை 26,338 27
1996 திருவையாறு திமுக 57,429 54 சுப்ரமணியன் அதிமுக 30,418 29
2006 திருவையாறு திமுக 52,723 46 துரை. கோவிந்தராஜன் அதிமுக 52,357 46
2016 திருவையாறு திமுக 100,043 49.76 எம். ஜி. எம். சுப்பிரமணியன் அதிமுக 85,700 42.63
2021 திருவையாறு திமுக[6] 103,210 48.82 பூண்டி எஸ். வெங்கடேசன் பாஜக 49,560 23.44

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-12.
  4. "List of successful candidates" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.
  5. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.
  6. திருவையாறு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_சந்திரசேகரன்&oldid=3943854" இலிருந்து மீள்விக்கப்பட்டது