உள்ளடக்கத்துக்குச் செல்

பாளையப்பட்டி (தெற்கு) ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாளையப்பட்டி (தெற்கு)
  ஊராட்சி  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தஞ்சாவூர்
மக்களவை உறுப்பினர்

ச. முரசொலி

சட்டமன்றத் தொகுதி திருவையாறு
சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பாளையப்பட்டி (தெற்கு) ஊராட்சி (palayappatti Gram Panchayat), தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள பூதலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4] இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[5]

இருப்பிடம்

[தொகு]

இவ்வூராட்சியானது மாவட்ட தலைநகரமான தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 336 கி.மீ தொலைவிலும் உள்ளது. இக்கிராமமானது தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு எல்லையாக திகழ்கிறது.

முதுமக்கள் தாழி

[தொகு]

தெற்கு பாளையப்பட்டியில் அண்மையில் மேற்கொள்ளபபட்ட ஆய்வில் மூன்று வகையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கிழடியில் கிடைத்தது போன்று வேலைப்பாடுடன் கூடிய பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை கருப்பு நிறத்திலும், கருப்பு சிவப்பு நிறத்திலும், சிதலடைந்த இரும்பு வாள் துகள்கள் காணப்பட்டன. இரும்பு உருக்கியப் பின் எஞ்சியக் கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டன.[6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. https://www.onefivenine.com/india/villages/Thanjavur/Budalur/Palayapatti-_3asouth_4a
  5. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
  6. https://tamil.abplive.com/news/thanjavur/eemathazhi-found-near-thanjavur-methos-used-in-ancient-days-to-burry-deadbodies-tnn-226827
  7. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2025/Jun/22/sangam-period-eemathi-thazhi-discovered-near-thanjavur
  8. https://tamil.news18.com/photogallery/thanjavur/sangam-period-archaeological-sites-in-thanjavur-researchers-compare-it-to-keezhadi-adn-pdp-local18-ws-l-1839373.html