கொய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொய்யா
கொய்யா (Psidium guajava)
கொய்யா (Psidium guajava)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்குந்தாவரம்
வகுப்பு Magnoliopsida
துணைவகுப்பு: Rosidae
வரிசை: Myrtales
குடும்பம்: Myrtaceae
துணைக்குடும்பம்: Myrtoideae
Tribe: Myrteae[1]
பேரினம்: Psidium
லி.
இனங்கள்

About 100, see text

மரத்தில் கொய்யாக்காய்

கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இது ஒரு குறுமரமாகும்.இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்[தொகு]

 • கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
 • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
 • கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
 • கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
 • கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


கொய்யாவின் பயன்கள்[தொகு]

 • கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி சந்தையில் உலா வருகின்றன.
 • கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
 • கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.

பயிரிடத் தேவையான காலநிலை[தொகு]

 • ஈரலிப்பான காலநிலையிலும் அதேபோல் உலர் பிரதேசங்களிலும் பயிரிடப்படக்கூடியது.
 • மழை வீழ்ச்சி- 1000 முதல் 4000 மில்லி மீட்டர்.
 • உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1500-2000 மீட்டர்.
 • மண்- களி, மணல், இருவாட்டி எதிலும் பயிரிடலாம்.
 • கார காடித்தன்மை -pH 4.5-9.0

மேற்கோள்கள்[தொகு]

 1. "Psidium". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2009-01-27). பார்த்த நாள் 2009-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்யா&oldid=1883659" இருந்து மீள்விக்கப்பட்டது