உள்ளடக்கத்துக்குச் செல்

சூரங்குடி ஊராட்சி, விருதுநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரங்குடி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி விருதுநகர்
மக்களவை உறுப்பினர்

மாணிக்கம் தாகூர்

சட்டமன்றத் தொகுதி சாத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

அ. கடற்கரைராஜ் (திமுக)

மக்கள் தொகை 5,020
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சூரங்குடி ஊராட்சி (Soorangudi Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4] இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5020 ஆகும். இவர்களில் பெண்கள் 2508 பேரும் ஆண்கள் 2512 பேரும் உள்ளனர்.

கிழவனார் கோவில் என்று கூறப்படும் பழங்க்காலக்கோவில்,நடுகல்,மண்பாண்ட ஓடுகளுடன் கூடிய பொட்டல் கண்மாய் மற்றும் கண்மாய்கரையில் பாண்டியர் கால சிற்பங்கள் நடுச்சூரங்குடியில் காணப்படுகின்றன. 18 3/4 சாதியார் வாழ்ந்ததாக வாய்மொழி வரலாறுகள் கூறுகின்றன.அதன் தொல் எச்சங்களாக மரச்செக்குகள்,கல் மண்டபங்கள் காணப்படுகின்றன.

1932 ஆம் ஆண்டு நடந்த எட்டுக்கொலைகள் தமிழகத்தின் கவனத்தை நடுச்சூரன்குடிப்பக்கம் திருப்பியது.

அங்கே சமம் அறக்கட்டளை நிறுவப்பட்டு ஏழைக்குழந்தைகள் குறிப்பாக பெண்குழந்தைகள் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறது. கொரொனா காலத்தில் தமிழகத்துக்கு முன்மாதிரியாக அரிசிப்பை வழங்கியது சமம் அறக்கட்டளை.

தமிழகத்தில் முதன் முறையாக கிராமப்பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் தினம் 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

2025 மார்ச் 28 ஆம் தேதி அந்ந்நாளைய மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் ஆயிரம் பெண்கள் கூடிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

எஸ் காமராஜ் என்கிற மூத்தஎழுத்தாளர்,நாவலாசிரியர் மு.தமிழ்ச்செல்வன்,கவுஞர் .ஆ.அசோக் ஆகியோர் பிறந்த ஊர் நடுச்சூரன்குடி

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

அடிப்படை வசதிகள்எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள்401
சிறு மின்விசைக் குழாய்கள்5
கைக்குழாய்கள்48
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்7
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள்21
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்7
ஊரணிகள் அல்லது குளங்கள்14
விளையாட்டு மையங்கள்1
சந்தைகள்1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள்3
ஊராட்சிச் சாலைகள்1
பேருந்து நிலையங்கள்1
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள்9

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. கண்மாய்சூரங்குடி
  2. மீனாட்சிபுரம்
  3. நடுசூரங்குடி
  4. புதுச்சூரங்குடி
  5. ஸ்ரீரெங்கபுரம்
  6. சூரங்குடி

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  5. 1 2 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
  6. ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.