வங்காள விரிகுடா
வங்காளவிரிகுடா Bay of Bengal | |
---|---|
அமைவிடம் | தெற்காசியா |
பெருங்கடலின் வகை | விரிகுடா |
Primary sources | இந்தியப் பெருங்கடல் |
Basin countries | ![]() ![]() ![]() ![]() ![]() |
ஆகக்கூடிய நீளம் | 2,090 கிமீ; c.1,300 மைல் |
ஆகக்கூடிய அகலம் | 1,610 கிமீ; 1,000 மைல் |
பரப்பளவு | 2,172,000 கிமீ² |
சராசரி ஆழம் | 2,600 மிமீ ; 8,500 அடி |
ஆகக்கூடிய ஆழம் | 4,694 மீ ; 15,400 அடி |
வங்காள விரிகுடா (Bay of Bengal) இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும்.[2] இக்கடலை சோழமண்டல கடல் என அழைக்க சிகாக்கோ பேராசிரியர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை.
வங்காள விரிகுடாவில் ஆழிப்பேரலை
[தொகு]திசம்பர் 26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.
தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது.
இந்தியாவில் 9571, இந்தோனேசியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் ஆழிப் பேரலைக்கு பலியாயினர்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Map of Bay of Benglal- World Seas, Bay of Bengal Map Location – World Atlas".
- ↑ https://www.britannica.com/place/Bay-of-Bengal Bay of Bengal
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/tsunami-12-years-on-270477.html
வெளி இணைப்புகள்
[தொகு]Bay of Bengal – விளக்கம்
பொதுவகத்தில் Bay of Bengal தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- 487 V. Suryanarayan, Prospects for a Bay of Bengal Community
- Arabian Sea: depth contours and undersea features – Map/Still – Britannica Concise
- Bay of Bengal in Encyclopedia
- Bay of Bengal Large Marine Ecosystem Project