காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில் என்பது தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், காமநாயக்கன் பாளையம் வட்டத்தில், காமநாயக்கன் பாளையம் நகரில், அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் சிவன் கோவில் ஆகும். இக்கோவில் இருக்கும் இடமெல்லாம் சகல செல்வங்கள் இருக்கும் என்பது புராண வரலாறு கூறுகிறது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

இக்கோவிலின் புராணம் தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.

  • அசுரனை அழிக்க சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணை திறந்ததாகவும் பின் பார்வதி தேவி சிவனின் பாதி உருவில் சேர்ந்து அந்த அசுரனை அழிக்க நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கு இடையே நடனமாடியும் அசுரனை அழித்தாக கூறப்படுகிறது. அதற்காக முழு உருவம் எடுத்ததாக கூறப்படுகிறது. பின் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரராக நின்றதும் அந்த நிழல் காமநாயக்கன் பாளையத்தில் விழுந்ததாகவும் அதனாலையே இவ்வூரிலும் அர்த்தநாரீஸ்வரராக அவதாரம் எடுத்ததாகவும் புராண தல வரலாறு கூறுகிறது.
  • இக்கோவில் சுமார் 670 ஆண்டுகளுக்கு முன்னரே சாதாரண அளவில் கட்டப்பட்டும், பிறகு ஊர் பொதுமக்கள் பாராமரிப்பில் விடப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பின்பு இக்கோவில் கால வளர்ச்சிக்கு ஏற்ப கட்டப்பட்டது. இக்கோயில் கி.பி 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கோவிலில் தல விருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது.
  • பெரும்பாலும் நாயக்கர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
  • காடை குலத்தாரின் குல தெய்வமாக இத்தலம் கருதப்படுகிறது.

கால பூஜைகள்[தொகு]

இந்த காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கால பைரவர் பெரியநாயகி சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு பூஜைகள் மிக ஏராளமாக நடப்படுகிறது.வருடத்திற்கு ஒருமுறை கோவில் நிர்வாகம் சார்பில் பழநி பாதையாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது.

  • மேலும் ஆண்டிற்கு ஒருமுறை குத்து விளக்கு பூஜை நடைபெறுகிறது.
  • இங்கு பிரதோஷ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக சோமவாரப் பிரதோஷம்,சனிப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
  • அஷ்டமி காலங்களில் காலபைரவர், நவகிரகங்கள், பெரியநாயகி சன்னதிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
  • கோவிலானது வாரத்தில் அனைத்து நாட்களும் காலை மற்றும் மாலை என இருநேரங்களும் நடை திறக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெறும்.

சிறப்பு[தொகு]

ஆண் பாதி பெண் பாதி கொண்ட இந்த திருத்தலத்தை தமிழ்நாட்டில் எங்குமே இக்கோவிலைக் காண்பது மிக அரிதான ஒன்றாகும்.இக்கோவில் தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. அவை

ஆகும். இதில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பொதுவாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவில் காமநாயக்கன் பாளையம் பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பானதாக இவ்வூர் மக்கள் போற்றுகின்றனர்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் காமநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் காமநாயக்கன் பாளையம் நகரில் அமைந்துள்ளது. பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.இப்பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.இப்பேருந்து திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் இயக்கப்படுகிறது. திருப்பூர்-பொள்ளாச்சி வழி பல்லடம்-காமநாயக்கன் பாளையம்-நெகமம் வழித்தடம் ஆகும்.சேலம்,ஈரோடு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி பேருந்து இயக்கப்படுகிறது.கோவையில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு காமநாயக்கன் பாளையம் நகரத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறது.

முகவரி[தொகு]

அஞ்சல் முகவரி:- அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்,பள்ளி வீதி,காவல் நிலையம், பொள்ளாச்சி மெயின் ரோடு, காமநாயக்கன் பாளையம் நகரம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன் பாளையம் - 641658.

மேற்கோள்கள்[தொகு]