உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பூர் மாவட்டக் காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்ட காவல்துறை என்பது தமிழக காவல்துறையின் கீழ் தமிழக அரசின் கட்டுப்பட்டின் கீழ் செயல்படும் ஓர் மக்கள் பாதுகாப்பு துறை ஆகும். இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய காவல்துறை தமிழக காவல் துறை ஆகும். இந்த காவல் துறை ஒன்பது மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஜி என்ற முறையில் பிரிக்கப்படுகிறது.பின் தமிழகத்தில் ஏழு மிகப்பெரிய மாநகரங்களில் மட்டுமே காவல்துறை காவல் ஆணையர் (COMMISSIONER OF POLICE) என்ற தலைமையின் கீழும் செயல்படுகிறது. இதில் திருப்பூர் மாநகரமும் ஒன்று. திருப்பூர் மாநகருக்கு என தனி காவல் ஆணையர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார். மொத்தம் மாவட்டத்தில் இருபத்து ஐந்து காவல் நிலையங்களும் , ஆறு அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் , இரண்டு தடை மற்றும் கலால் துறைகளும் செயல்படுகின்றன.[1]

திருப்பூர் மாவட்டக் காவல்துறை
{{{logocaption}}}
குறிக்கோள்வாய்மையே வெல்லும்

திருப்பூர் மாவட்ட காவல் நிலையங்கள்

[தொகு]
1926 - ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம். தற்போது புதிய கட்டடத்தில் செயல்படுகிறது.
1926 - ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பே கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம். தற்போது புதிய கட்டடத்தில் செயல்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து காவல் நிலையங்கள் உள்ளன. அவை மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொடர்பு எண்ணுடன் கீழே விரிவாக தரப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் மகளிர் காவல் நிலையங்கள்

[தொகு]

பெண்கள் சமூதாயத்தில் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்க தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இது தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ தன்னாட்சியாக செயல்படும் ஓர் காவல் நிலைய சேவையாகும். இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் இந்த காவல் நிலையங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த காவல் நிலையங்கள் திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது.இந்த காவல் நிலையங்கள் மாவட்டத்தில் ஆறு மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதனால் மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொடர்பு எண்ணுடன் விரிவாக தரப்பட்டுள்ளது.

  • அனைத்து மகளிர் காவல் நிலையம், பல்லடம் - 04255-255100
  • அனைத்து மகளிர் காவல் நிலையம், அவிநாசி -
  • அனைத்து மகளிர் காவல் நிலையம், காங்கேயம் - 04257-230641
  • அனைத்து மகளிர் காவல் நிலையம், உடுமலைப்பேட்டை - 04252-226798
  • அனைத்து மகளிர் காவல் நிவையம், தாராபுரம் - 04258-221050
  • அனைத்து மகளிர் காவல் நிலையம், திருப்பூர் மாநகராட்சி - 0421-2202351

திருப்பூர் மாவட்ட தடை மற்றும் கலால் துறை

[தொகு]

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவர்களை கண்டறியவும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட தடை மற்றும் கலால் துறை காவல் நிலையங்களும் (Prohibition and Excise Department) செயல்படுகின்றன. இவை மொத்தம் மாவட்டத்தில் இரண்டு நிலையங்கள் செயல்படுகின்றன. அவைகள்

  • PED துறை, அவிநாசி - 04296-273330
  • PED துறை, காங்கேயம் - 04257-230683[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Police Stations | Tiruppur District, Government of Tamil Nadu | Textile City | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
  2. https://www.google.com/urlsa=t&source=web&rct=j&url=https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index%3F0-1.-epamentChallan&ved=2ahUKEwiw7fGH08rxAhXTFLcAHZAjBBUQFjAAegQICRAC&usg=AOvVaw0xZleNuitoDM2Dk-PPfNnK[தொடர்பிழந்த இணைப்பு]