ஆண்டிபாளையம்
Appearance
ஆண்டிபாளையம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் வருகூராம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர். திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை வழியாகப் பள்ளிபாளையம் செல்லும் சாலையில் ஐந்தாம் கல்தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் முடவாண்டிக் கவுண்டர் என்னும் சாதியினர் பெருவாரியாக வசிக்கின்றனர். ஆகவே இவ்வூருக்கு அச்சாதி அடிப்படையில் இப்பெயர் வந்துள்ளது. பாளையம் என்பது பொதுக்கூறு. 'ஆண்டி' என்பது சாதியைக் குறிக்கும் சிறப்புக்கூறு. தமிழகத்தில் பல 'ஆண்டிபாளையங்கள்' உள்ளன. கொங்கு நாட்டில் உள்ள 'ஆண்டிபாளையங்கள்'அனைத்தும் முடவாண்டிக் கவுண்டர் சாதியினர் காரணமாகப் பெயர் பெற்றவையே ஆகும்.