பேச்சு:தினத்தந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தினத்தந்தி என்பது குறித்த நாளிதழை மட்டுமே குறிக்கும் என்றால் தினத்தந்தி (நாளிதழ்) என்று இருக்க வேண்டியதில்லை. தினத்தந்தி என்பது மட்டுமே போதுமானது. --கோபி 15:33, 31 ஜூலை 2006 (UTC)

இது பெயரொன்றாக இருப்பதால், பொதுவான ஒழுங்குமுறைப்படி பெயரிடுதல் ஒரு சீர்படுத்தப்பட்ட முறைமையாக இருக்குமல்லவா? --மு.மயூரன் 15:36, 31 ஜூலை 2006 (UTC)

தினத்தந்தி என்பது குறித்த நாளிதழை மட்டுந்தானே குறிக்கிறது? உதாரணமாக வீரகேசரி என்பது மட்டுமே போதும். வீரகேசரி (நாளிதழ்) என்று தேவையில்லை. செல் பயன்படுத்தித் தேடுபவர்களுக்காக வேண்டுமென்றால் வீர கேசரி என்றும் ஒரு பக்க வழிமாற்றம் அமைக்கலாம். ஆனால் நாளிதழ் என்ற பின்னொட்டுத் தேவையில்லை. ஆகையால் தினத்ததி என்பதற்கு மீள நகர்த்தப் பரிந்துரைக்கிறேன் --கோபி 15:40, 31 ஜூலை 2006 (UTC)

விக்கிபீடியாவில் தேடலின் மூலமே கட்டுரைகளை அணுகுவது இலகுவானது. ஆகையால் பொதுப் பயன்பாட்டிலுள்ள பெயர்கள் குழப்பமூட்டுவனவாக இருந்தால் மட்டுமே அடைப்புக்குறிக்குள் பின்னொட்டுத்த் தேவைப்படும். ஏனையவை சாதாரணமாக இருப்பதே தேடலை இலகுவாக்கும்.--கோபி 15:42, 31 ஜூலை 2006 (UTC)

கோபியின் கருத்து சரியானதாகவே தோன்றுகிறது. --சிவகுமார் 15:44, 31 ஜூலை 2006 (UTC)
எனக்கும் இது சரியாகப் படுகிறது. -- Sundar \பேச்சு 15:49, 31 ஜூலை 2006 (UTC)

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தினசரி நாளிதழ் தினத்தந்தியாகும். - இது சரியான தகவலா? --பயனர்:மாயவரத்தான் 02:31, 23 மார்ச்சு 2013 (IST)

இந்து, சுதேசமித்திரன் உள்ளிட்ட பல தினசரிகள் இருந்தன. தகவலை நீக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 00:39, 23 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தினத்தந்தி&oldid=1387736" இருந்து மீள்விக்கப்பட்டது