தனியார் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன் தொடக்கக் கல்வி நிலையில் (2015) தனியார் நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பங்கு விவரம்
ஆரம்பக் கல்வி நிலையில் தனியார் நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பங்கு விவரம் (2015)

ஒரு தனியார் பள்ளி (Private school) என்பது ஒரு அரசுப் பள்ளியைப் போலன்றி அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாத அல்லது நிதியுதவி பெறாத பள்ளியாகும் .[note 1]

தனியார் பள்ளிகள் ('சுயாதீனப் பள்ளிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன), தேசிய அல்லது உள்ளூர் அரசாங்கத்தைச் சார்ந்து இல்லாத பள்ளிகள் ஆகும். [1]

வகைகள்[தொகு]

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆத்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல பொதுநலவாய நாடுகளில் இந்த வார்த்தையின் பயன்பாடு பொதுவாக தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி நிலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது பல்கலைக்கழகங்கள் அல்லது பிற மூன்றாம் நிலை நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. [2] வட அமெரிக்காவில் உள்ள தனியார் கல்வியானது முன்பள்ளி முதல் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்கள் வரையிலான கல்வி நடவடிக்கைகளின் முழு வரம்பையும் உள்ளடக்கியுள்ளது. [3]

நாடு வாரியாக[தொகு]

இந்தியா[தொகு]

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனாதியாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள்

இந்தியாவில், தனியார் பள்ளிகளானது சுயாதீனப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதால், அவை உதவி பெறும் பள்ளிகள் என அழைக்கப்படுகிறது. எனவே, ஒரு தனியார் பள்ளி என்பது அரசிடம் இருந்து உதவி பெறாத சுதந்திரப் பள்ளி என வரையறுக்கப்படுகிறது. இவ்வாறான பள்ளிகளுக்கான கட்டிடங்களுக்கான நிலங்கள் அரசிடமிடருந்தோ அல்லது மானியமாகவோ வாங்கப்படுவதில்லை. அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி இடம் பெற்றுள்ளதால் பள்ளிகளை நிர்வகிப்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டின் அதிகாரத்திற்கு உட்பட்டது. துறையின் நிர்வாகத்திற்காக மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கும் போது, மத்திய அரசு பரந்த கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவது நடைமுறையில் உள்ளது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை ஆகியவை பல மாநிலங்களில் இருக்கும் முக்கிய தேர்வு வாரியங்கள்

குறிப்புகள்[தொகு]

  1. In England and Wales, some elite, fee-charging private schools for 13- to 18-year-olds are described as 'Public School (UK)'.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Types of school". GOV.UK. United Kingdom Government. பார்க்கப்பட்ட நாள் 19 September 2023.
  2. "Commonwealth countries must ensure that each child has 12 years of quality education". https://www.telegraph.co.uk/education/2018/02/22/commonwealth-countries-must-ensure-child-has-12-years-quality/. 
  3. ourkids.net. "Private Schools Versus Public Schools | Private Vs Public". www.ourkids.net (in ஆங்கிலம்). Archived from the original on 30 June 2018. பார்க்கப்பட்ட நாள் 30 June 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_பள்ளி&oldid=3891742" இலிருந்து மீள்விக்கப்பட்டது