ஜார்ஜ் ஓம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் சைமன் ஓம்
Georg Simon Ohm3.jpg
பிறப்பு மார்ச்சு 16, 1789(1789-03-16)
எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத்
(தற்கால ஜெர்மனி)
இறப்பு 6 சூலை 1854(1854-07-06) (அகவை 65)
மியூனிக், பவேரியா இராச்சியம்
வாழிடம் பிரான்டென்பர்கு-பேரெயத், பவேரியா
தேசியம் செருமானியர்
துறை இயற்பியல் (மின்சாரம்)
பணியிடங்கள் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் எர்லாங்கென் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர் கார்ல் கிறிஸ்டியன் வொன் லாங்கஸ்டோர்ப்
அறியப்படுவது ஓமின் விதி
ஓமின் ஒலியியல் விதி
விருதுகள் கோப்லி பதக்கம் (1841)[1]

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm, இடாய்ச்சு: [oːm]; மார்ச்சு 16, 1789 – சூலை 6, 1854) செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டா கண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஓம்&oldid=1729544" இருந்து மீள்விக்கப்பட்டது