மணித்தக்காளி
மணித்தக்காளி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Solanales |
குடும்பம்: | Solanaceae |
பேரினம்: | Solanum |
இனம்: | S. nigrum |
இருசொற் பெயரீடு | |
Solanum nigrum L. | |
துணையினம் | |
S. nigrum subsp. nigrum |
மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1]
மற்ற பெயர்கள்[தொகு]
இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.[2]
சுக்குட்டி கீரை[தொகு]
மணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.
மருத்துவப் பண்புகள்[தொகு]
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.உடற்றேற்றி,சிறுநீர் பெருக்கி,வியர்வைப்பெருக்கி,கோழையகற்றி செய்கைகள் உள.