கொவ்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொவ்வை
Coccinia grandis.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Coccinia
இனம்: C. grandis
இருசொற் பெயரீடு
Coccinia grandis
(L.) Voigt

கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.

மருத்துவ பயன்பாடுகள்[தொகு]

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.

இலக்கியத்தில் கோவை[தொகு]

இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார்.[1]

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் 
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

உசாத்துணை[தொகு]

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா

மேற்கோள்கள்[தொகு]

  1. சி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. "தமிழ் இலக்கியம் - தொன்று தொட்டு இன்று வரை". பார்த்த நாள் 2006-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொவ்வை&oldid=1899339" இருந்து மீள்விக்கப்பட்டது