வல்லாரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வல்லாரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | Mackinlayaceae |
பேரினம்: | Centella |
இனம்: | C. asiatica |
இருசொற் பெயரீடு | |
Centella asiatica (லி.) உர்பான் | |
வேறு பெயர்கள் | |
வல்லாரை (Centella asiatica) (Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.
இது பல மருத்துவ குணங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. வல்லாரையை அடிப்படையாக கொண்டு சந்தையில் வல்லாரை கரைசல், களிம்பு, மாத்திரை, சோப்பு, இலைத்தூள், எண்ணை, அழகுசாதனப் பொருட்கள் போன்றவை கிடைக்கின்றன. ஆனால் இவற்றை தயாரிக்கும் அளவுக்கு வணிக ரீதியாக வல்லாரை பயிரிடப்படுவதில்லை. வல்லாரை வனம், இன வாழிடத்தில் மட்டும் சேகரிக்கப்படுவது என்கிறார். எஸ். செல்வராஜ். மேலும் வல்லாரைக்கு சம்பந்தமில்லாத தாவரங்களான எலிக்காதிலை கொடி, மலை வல்லாரை போன்றவற்றை வல்லாரை என்ற பெயரில் சந்தையில் விற்கும் போக்கு உள்ளது. என ஆய்வாளர்களான சுபரமணியன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கூறுகின்றனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வல்லாரை என்ற பெயரில் சந்தையில் விற்பனையாகும் பல்வேறு கீரைகள் - நிபுணர்கள் சொல்வது என்ன?". 2023-10-02.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)