கரிசலாங்கண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
False Daisy
Starr 030807-0168 Eclipta prostrata.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவர இனம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
பேரினம்: Eclipta
இனம்: E. alba
இருசொற் பெயரீடு
Eclipta alba

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.

பெயர்கள்[தொகு]

இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.[1]

காணப்படும் நாடுகள்[தொகு]

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

  • நீர்=85%
  • மாவுப்பொருள்=9.2%
  • புரதம்=4.4%
  • கொழுப்பு=0.8%
  • கால்சியம்=62 யூனிட்
  • இரும்புத் தாது=8.9 யூனிட்
  • பாஸ்பரஸ்=4.62%
  • இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (2019 பெப்ரவரி). "உடம்பை இரும்பாக்கும் கரிசாலை". கட்டரை. இந்து தமிழ். 24 பெப்ரவரி 2019 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசலாங்கண்ணி&oldid=3463176" இருந்து மீள்விக்கப்பட்டது