விறகு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விறகு (firewood) என்பது எரிக்கப் பயன்படும் மரத்துண்டுகளின் பெயராகும். இவை செங்கல் சூலைகளிலும் தொழிற்சாலைகளிலும் வீடுகளில் சமையலறைகளில் அடுப்புகளிலும் பயன்படுகின்றன. அடுப்புகளில் பயன்படுத்த அதிக சாம்பல் வராத, நன்றாக எரியக்கூடிய விறகுகளையே பயன்படுத்துவர். பாலை, முதிரை, வேம்பு, வீரை போன்ற மரங்களிலிருந்து செய்யப்படும் விறகுகள் குறிப்பிடத்தக்கவையாகும். சிலர் காடுகள், மலைகளின் பக்கம் சென்று அங்கு மரச் சுள்ளிகளையும் சிறு தடிகளையும் பொறுக்கி வந்து விறகாகப் பயன்படுத்துவர்.