சத்ரா
சத்ரா மாவட்டம் | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி | |
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்கில் சத்ரா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°12′16″N 84°52′37″E / 24.2045100°N 84.8770400°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | சத்ரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 16 km2 (6 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 49,985 |
• அடர்த்தி | 3,100/km2 (8,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 825401 |
தொலைபேசி குறியீடு எண் | 06541 |
வாகனப் பதிவு | JH-13 |
சத்திர மக்களவைத் தொகுதி | சத்ரா |
சட்டமன்றத் தொகு | சத்ரா |
இணையதளம் | chatra |
சத்ரா (Chatra), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்கில் உள்ள சத்ரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடமேற்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 450 மீட்டர் உயரத்தில் அமைந்த சத்ரா நகரம் மலைக்காடுகளால் சூழ்ந்தது. சத்ரா மாவட்டத்தில் பல அருவிகள் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் 660 மெகா வாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையங்கள் சத்ராவில் நிறுவப்பட்டது.[1] சத்ரா மாவட்டத்தில் மத்திய நிலக்கரி வயல்களின், 1,230 சதுர கிலோமீட்டர்கள் (470 sq mi) பரப்பளவு சத்ரா மாவட்டதில் உள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 22 வார்டுகளும், 8,402 வீடுகளும் கொண்ட சத்ரா நகராட்சியின் மக்கள் தொகை 49,985 ஆகும். அதில் ஆண்கள் 26,555 மற்றும் பெண்கள் 23,430 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 882 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7800 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,603 மற்றும் 439 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 67.33%, இசுலாமியர் 31.63%, கிறித்தவர்கள் 0.32% மற்றும் பிறர் 0.71 % ஆகவுள்ளனர்.[3]
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலைகள் எண் 22 மற்றும் 522 சத்ரா நகரத்தின் வழியாகச் செல்கிறது.
கல்வி
[தொகு]சத்ரா அரசு கலை அறிவியல் கல்லூரி 1961-இல் நிறுவப்பட்டது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pandemic delays NTPC's Karanpura mega project in Chatra". The Times of India, 9 September 2020. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "The North Karanpura Coalfields". Jharkhand. sinclair-environmental. Archived from the original on 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ Chatra Population, Religion, Caste, Working Data Chatra, Jharkhand - Census 2011
- ↑ "Chatra College, Chatra". College Dekho. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.