சோகராய் மற்றும் கோவர் ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகராய் மற்றும் கோவர் ஓவியங்கள்

சோகராய் மற்றும் கோவர் ஓவியம் (Sohrai and Khovar painting) என்பது சார்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பாரம்பரியமாகப் பெண்களால் வரையப்படும் சுவரோவியக் கலையாகும்.[1][2] இந்த ஓவியங்கள் பாரம்பரியமாகக் குடிசைச் சுவர்களை அலங்கரிக்க பயன்படுகிறது. இதனைக் காகிதத்திலும் துணியிலும் கூட வரைவார்கள். காகிதம் மற்றும் துணிகளில் வரையப்படும் ஓவியங்களை புரவலர்களுக்கு விற்று பெண்கள் வரிவாய் ஈட்டுகின்றனர்.[3]

சோகராய் ஓவியம், சோகராய் எனப்படும் அறுவடை திருவிழாக்களின் போது வரையப்படுகிறது.[3] இந்த ஓவியங்கள் வண்ணத்தில் வரையப்படுகிறது. கோவர் ஓவியம் திருமணங்களில், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரையப்படுகிறது.[4][5]

வரலாறு[தொகு]

இந்தக் கலையானது சமஸ்கிருதி அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தை நிறுவிய புலு இமாமால் பிரபலப்படுத்தப்பட்டது.[3][6] 2018ஆம் ஆண்டில், சார்க்கண்டு அரசு தொடருந்து மற்றும் அரசாங்க கட்டிடங்களை சோகராய் ஓவியங்களால் அலங்கரிக்கும் திட்டங்களை அறிவித்தது.[7] இவை 2020-ல் புவியியல் சார்ந்த குறியீட்டினைப் பெற்றது.[8]

இந்தியாவின் சார்க்கண்டில் சோகராய் சுவர் ஓவியங்கள்

செயல்முறை[தொகு]

சுவர்களில் முதலில் மண் மற்றும் சாணம் கலந்த கலவை பூசி, பின்னர் வர்ணம் தீட்டப்படும்.[4]

பாரம்பரியமாக பெண்களால் ஓவியம் வரையப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Aasheesh (2020-03-05). "India's new rock stars". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Balasubramaniam, Chitra (2018-09-06). "The beauty of Sohrai and Khovar paintings" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/the-beauty-of-sohrai-and-khovar-paintings/article24881453.ece. 
  3. 3.0 3.1 3.2 Chandra, Kavita Kanan (2018-02-17). "Women keep it alive". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. 4.0 4.1 "Cocooned in Jharkhand 's Sohrai and Khovar art". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  5. Heather (2016-05-18). "Hazaribagh: The Forest Villages". Asian Art Newspaper (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  6. Deogharia, Jaideep (November 6, 2016). "Hazaribag's tribal wall art at Paris exhibition". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Jharkhand's tribal Sohrai paintings to adorn trains, PMSAY houses". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  8. Kandavel, Sangeetha (2020-05-12). "GI tag for Jharkhand’s Sohrai Khovar painting, Telangana’s Telia Rumal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/gi-tag-for-jharkhands-sohrai-khovar-painting-telanganas-telia-rumal/article31569123.ece.