தன்பாத்

ஆள்கூறுகள்: 23°48′N 86°27′E / 23.8°N 86.45°E / 23.8; 86.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்பாத்
—  நகரம்  —
தன்பாத்
இருப்பிடம்: தன்பாத்

, சார்க்கண்ட்

அமைவிடம் 23°48′N 86°27′E / 23.8°N 86.45°E / 23.8; 86.45
நாடு  இந்தியா
மாநிலம் சார்க்கண்ட்
மாவட்டம் தன்பாத்
ஆளுநர் [1]
முதலமைச்சர் ஹேமந்த் சோரன்[2]
மக்களவைத் தொகுதி தன்பாத்
மக்கள் தொகை

அடர்த்தி

26,82,662 (2011)

1,284/km2 (3,326/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2,052 சதுர கிலோமீட்டர்கள் (792 sq mi)

222 மீட்டர்கள் (728 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.dhanbad.nic.in

தன்பாத் (Dhanbad, இந்தி: धनबाद, சந்தாளி மொழி:ᱫᱷᱟᱱᱵᱟᱫᱽ, உருது: دھنباد) சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் நகரமாகும். நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால் இது இந்தியாவின் நிலக்கரித் தலைநகர் எனவும் அறியப்படுகிறது. உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் 79வது நிலையில் உள்ளது.[3] 2011 கணக்கெடுப்பின்படி, தன்பாத் இந்தியாவின் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான 35 நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[4] இந்திய இரயில்வேயின் கோட்டங்களில் வருமான ஈட்டலில் மும்பை கோட்டத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது.

நிலக்கரி சுரங்கம்

தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் டாடா ஸ்டீல், பாரத் கோக்கிங் கோல் லிட்., ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட்., இந்திய இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (IISCO) ஆகியவற்றிற்கு சொந்தமானவை. நிலக்கரி அகழ்ந்தெடுத்தல், கழுவுதல், சூளைக்கரி தயாரித்தல் ஆகியன முகனையான தொழில்களாகும். இந்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாவின் பாரத் கோக்கிங் கோல் லிட்.மற்றும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட். கூடுதலான சுரங்கங்களை இயக்கி வருகின்றன. இவை பெரும்பாலும் திறந்தநிலைச் சுரங்கங்களாகும். தனியார்த்துறை டாடா ஸ்டீல் நிலத்தடி சுரங்கங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்காக குடியிருப்பு நகர்களை அமைத்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தன்பாத்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்பாத்&oldid=3557509" இருந்து மீள்விக்கப்பட்டது