தேவ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவ்கர்
நகரம்
அடைபெயர்(கள்): பாபா நகர்
தேவ்கர் is located in Jharkhand
தேவ்கர்
தேவ்கர்
தேவ்கர் is located in இந்தியா
தேவ்கர்
தேவ்கர்
ஆள்கூறுகள்: 24°29′N 86°42′E / 24.48°N 86.7°E / 24.48; 86.7ஆள்கூறுகள்: 24°29′N 86°42′E / 24.48°N 86.7°E / 24.48; 86.7
நாடுஇந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்தேவ்கர்
அரசு
 • Bodyதேவ்கர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்337
ஏற்றம்254
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்203
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்814112
தொலைபேசி குறியீடு06432
வாகனப் பதிவுJH-15
பாலின விகிதம்921 /
மக்களவைத் தொகுதிகோடா
சட்டமன்றத் தொகுதிதேவ்கர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்https://deoghar.nic.in/

தேவ்கர் (Deoghar) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான பைத்தியநாத் கோவில் உள்ளது.

தேவ்கர் கோயில், 1802

புவியியல்[தொகு]

இந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தில் அமைந்த இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 255 மீட்டர் (833 அடி) உயரத்தில் உள்ள்து.[1] அஜய் ஆற்றின் கரையில் தேவ்கர் நகரம் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றி சிறு குன்றுகள் சூழ்ந்துள்ளது. [2] Tapovan Pahaad has its cultural relevance found in Hindu scriptures . It is one of the amusement place in the city and serves as a habitat for monkeys.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35 வார்டுகளும், 36,768 வீடுகளும் கொண்ட தேவ்கர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 203,123 ஆகும். அதில் 107,997 ஆண்கள் மற்றும் பெண்கள் 95,126 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 26893 (13.24%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 881 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.68% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.30%, முஸ்லீம்கள் 4.96%, மற்றும் பிற சமயத்தவர்கள் 0.74% ஆகவுள்ளனர்.[4]

பண்பாடு[தொகு]

ஜார்கண்ட் மாநிலத்தின் பண்பாட்டு தலைநகரான தேவ்கர் நகரம் உள்ளது.[5]இந்நகரத்தில் இந்தி மொழி மற்றும் சந்தாளி மொழிகள் பேசப்படுகிறது.

கல்வி[தொகு]

  • அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், தேவ்கர்
  • தேவ்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தேவ்கர்
  • வைத்தியநாத் கமல் குமாரி சமசுகிருத கல்லூரி
  • தேவ் சங்கா தொழில் படிப்புகள் மற்றும் கல்வியியல் ஆய்வு நிறுவனம் (DIPSER)[6]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

தேவ்கர் தொடருந்து சந்திப்பு நிலையம் மூன்று நடைமேடைகள் கொண்டது. தேவ்கரிலிருந்து ராஞ்சி, அகர்தலா நகரங்களுக்குச் செல்ல விரைவு வண்டிகள் உள்ளது.[7]

வானூர்தி நிலயம்[தொகு]

தேவ்கர் நகரத்தின் அடல் பிகார் வாஜ்பாயி பன்னாட்டு வானூர்தி நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தேவ்கர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Deoghar
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்கர்&oldid=2952732" இருந்து மீள்விக்கப்பட்டது