தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
வகை | இந்திய அரசு நிறுவனம் மின்சக்தி அமைச்சகம் |
---|---|
நிறுவுகை | சூலை 7, 1948 |
தலைமையகம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தொழில்துறை | எரிசக்தி தொழில் |
உற்பத்திகள் | மின்சாரம் |
சேவைகள் | மின் உற்பத்தி மற்றும் மின்திறன் செலுத்தல், மண்வளப்பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு |
பணியாளர் | 8130 (2018) |
இணையத்தளம் | www |


தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (Damodar Valley Corporation (DVC) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். தாமோதர் பள்ளத்தாக்கு கழகம், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அணைகள் கட்டுவதும், புனல் மற்றும் அனல் மின்சாரம் உற்பத்தி செய்வதும், தாமோதர் ஆற்றில் வெள்ளத்தடுப்பு மற்றும் மண்வளப் பாதுகாப்பு மேற்கொள்வதும் இதன் முதன்மைப் பணிகளாகும். இக்கழகத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் இயங்குகிறது. [1]
வரலாறு[தொகு]
பருவ மழைகளின் போது தமோதர் ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளச் சேததத்தையும், மண் அரிப்பை தடுக்க, ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டவும், புனல் மின்சாரம் உற்பத்தி செய்யவும், இந்திய அரசு, பிகார் மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் கூட்டாக மார்ச், 7 சூலை1948 அன்று தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தை நிறுவினர்.
வடி நிலப்பரப்பு[தொகு]
தமோதர் ஆற்றின் வடிநிலம் 24,235 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இவ்வடிநிலப் பரப்பில் தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத், போகாரோ, ஹசாரிபாக், கேடர்மா, சத்ரா, பாலமூ, ராஞ்சி, லோஹர்தக்கா மற்றும் தும்கா என எட்டு மாவட்டங்களும், மேற்கு வங்காள மாநிலத்தின் வர்தமான், ஹூக்லி, பாங்குரா மற்றும் புருலியா என ஐந்து மாவட்டங்களும் உள்ளது.
தாமோதர் பள்ளத்தாக்கு மின்நிலையங்கள்[தொகு]
தாமோதர் பள்ளத்தாக்கு கழகம், தாமோதர் ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கங்கள் கட்டியும், நிலக்கரி சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு, 1953 முதல் புனல் மற்றும் அனல் மின்நிலையங்களிலிருந்து மின் உற்பத்தி செய்கிறது.
மின்சக்தி நிலையத்தின் பெயர் | மாநிலம் | உற்பத்தி திறன் மெகாவாட் |
குறிப்புகள் |
---|---|---|---|
மெஜியா அனல் மின்நிலையம் | மேற்கு வங்காளம் | 2,340 | |
இரகுநாதபுரம் அனல் மின்நிலையம் | மேற்கு வங்காளம் | 1,200 | |
மைத்தோன் அனல் மின்நிலையம் | ஜார்கண்ட் | 1,050 | டாடா நிறுவனத்துடன் இணைந்து[4] |
துர்காப்பூர் எஃக்கு மற்றும் அனல் மின்நிலையம் | மேற்கு வங்காளம் | 1,000 | |
கேடர்மா அனல் மின்நிலையம் | ஜார்கண்ட் | 1,000 | |
சந்திரபுரா அனல் மின்நிலையம் | ஜார்கண்ட் | 500 | |
பொக்காரா அனல் மின் நிலையம் - எண் 2 | ஜார்கண்ட் | 630 | |
பொக்காரா அனல் மின்நிலையம் - எண் 1 | ஜார்கண்ட் | 500 | |
துர்காபூர் அனல் மின்நிலையம் | மேற்கு வங்காளம் | 210 | |
பொக்காரோ மின் விநியோக கழகத்தின் நிலையம் | ஜார்கண்ட் | 338 | தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் மற்றும் பொக்காரோ மின் விநியோக நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் [5] |
மொத்தம் | 8768 |
மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் | மாநிலம் | உற்பத்தி திறன் மெகாவாட் |
---|---|---|
பஞ்செட் நீர்த்தேக்கம் | ஜார்கண்ட் | 80 |
மைத்தோன் நீர்த்தேக்கம் | ஜார்கண்ட் | 63.2 |
திலையா நீர்த்தேக்கம் | ஜார்கண்ட் | 4 |
மொத்தம் | 147 |
கட்டமைப்பு[தொகு]
தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் 7410 மெகா வாட் மின்சக்தி உற்பத்தித் திறன் கொண்ட ஆறு அனல் மின்நிலையங்களுடனும், 147.2 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி திறன் கொண்ட மூன்று புனல் மின்நிலையங்களுடன் விரிவாக்கம் செய்துள்ளது.
நீர் மேலாண்மை[தொகு]
1948 - 1953க்கு இடைப்பட்ட காலத்தில், தமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு கழகம், பராக்கர் ஆற்றின் குறுக்கே திலையா மற்றும் மைத்தோன் நீர்தேக்கங்களையும், தாமோதர் ஆற்றின் குறுக்கே பஞ்செட் நீர்தேக்கத்தையும், கோனார் ஆற்றின் குறுக்கே கோனார் நீர்த்தேக்கத்தையும் கட்டியுள்ளது. இதனால் பருவகாலங்களில் தாமோதர் ஆற்றின் வெள்ளச் சேதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
1955ல் துர்காபூரில் தாமோதர் அணை கட்டப்பட்டது. இதனால் வர்தமான், பாங்குரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களின் வேளாண் விளைநிலங்கள் நீர் வளம் பெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "DVC" இம் மூலத்தில் இருந்து 2007-02-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070210232841/http://www.dvcindia.org/.
- ↑ 2.0 2.1 "Generating Units". report (DVC) இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208101108/http://www.dvc.gov.in/dvcwebsite_new1/generating-units/. பார்த்த நாள்: 8 July 2016.
- ↑ 3.0 3.1 "Generating Units". DVC இம் மூலத்தில் இருந்து 2014-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140227195833/http://www.dvc.gov.in/powerplants.htm.
- ↑ "Power puffed by Maithon 1050MW Tata-DVC plant chugs to life". http://www.telegraphindia.com/1110915/jsp/frontpage/story_14508440.jsp.
- ↑ "The Official Website of BPSCL". http://www.bpscl.in/.