ஜெயந்த் சின்ஹா
ஜெயந்த் சின்கா (Jayant Sinha), இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1963ஆம் ஆண்டின் ஏப்ரல் 21ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் தில்லியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்திலும், பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்திலும், ஹார்வர்டு வணிகப் பள்ளியிலும் கல்வி பயின்றார். மத்திய அரசின் நிதித் துறைக்கான ராஜாங்க அமைச்சராகி உள்ளார்.[1] இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான யஷ்வந்த் சின்காவின் மகனான ஜெய்ந்த் சின்கா, 2019 மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் இவர் 2019-இல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.