வண்ணார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சலவைத் தொழில்
சலவை செய்தல்

வண்ணார்என்போர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு சாதியின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். இவர்களை வண்ணார் அல்லது டோபி என்கிற பெயர்களிலும் அழைப்பர். இச்சாதியினர் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆடைகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர், சுத்தப்படுத்திய ஆடைகளைத் தாங்கள் எடுத்து வந்த வீடுகளுக்குச் சென்று கொடுக்கின்றனர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர். அவர்கள் சாதீய படி நிலையில் தரம் குறைந்தோராகக் கணிக்கப்படுகின்றனர். அவ்வாறே, இலங்கையில் பெரும்பாலும் முடிவெட்டுவோரைக் கொண்ட சாதிப் பிரிவினர் நாவிதர் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களும் சாதீய படி நிலையில் பிற்படுத்தப்பட்டே உள்ளனர்.

மக்கள்தொகை[தொகு]

தமிழகத்தில் வண்ணார்கள் 20 லட்சத்து 637 பேர் வசிக்கின்றனர்.[1]

புதிரை வண்ணான்[தொகு]

முதன்மை கட்டுரை: புதிரை வண்ணான்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சில சாதியினர் வீடுகளில் சலவைத் தொழிலாளர் பணியினைச் செய்யும் சாதியினர் புதிரை வண்ணான் என்று அழைக்கப்படுகின்றனர். புதிரை வண்ணான் எனும் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்கள்[தொகு]

தஞ்சை மாவட்டத்தில் வண்ணாந்துரையில் அதிக மக்கள் வசிக்கின்றனர். திருச்சியில் கொள்ளிடத்தில் வண்ணார் தொழில் செய்து வருகின்றன.

ஆதாரம்[தொகு]

  1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணார்&oldid=2198745" இருந்து மீள்விக்கப்பட்டது