உள்ளடக்கத்துக்குச் செல்

தோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோபி (Dhobi) தொழில் சார்ந்த பெயர் ஆகும்,தோபா (Dhoba) என்பதே இந்த சமூகத்தின் உண்மையான பெயராகும்,பீகார் மற்றும் ஒரிசா,மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் டோபா மக்கள் விவசாயம் செய்யும் தொழிலையே செய்து வந்தனர்,அதிலும் ஜார்கண்டு சுற்றிலும் இதையே முக்கிய தொழிலாக செய்துவந்துள்ளனர்,1931யில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பு போது பீகார் மற்றும் ஒரிசா மாநிலத்தில் இம்மக்கள் டோபா என்றே தங்களின் ஜாதி அடையாளத்தை பதிவு செய்துள்ளனர்[1]

இவர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். பல்வேறு மாநிலங்களில் வாழுகின்ற தோபிகள், பல வேறுபட்ட இன தோற்றங்களைக் கொண்டவர்களாக இருக்கக்கூடும்,காலப்போக்கில் வட இந்தியாவில் அகமணம் விதிகளால் பிணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சாதியாக மாறினர். பெரும்பாலான தோபிகள் தாங்கள் வாழும் மாநிலங்களின் பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக வட இந்தியாவில் உள்ளவர்கள் இந்தி பேசுகிறார்கள், மகாராட்டிராவில் உள்ளவர்கள் மராத்தி பேசுகிறார்கள்.[2][3]

டோபி மக்கள் அனைத்து மதங்களையும் தழுவியவர்கள்,இம்மக்கள் தங்களை சத்திரிய மராட்டிய பரீத் என்று அழைத்து கொள்வார்கள்,சத்திரியர்கள் என்றால் பிராமணர்களுக்கு அடுத்து,இவர்கள் கடவுள் ராமர்யை விட தங்களை உயர்ந்த குல மக்களாகவே பார்க்கப்படுகின்றனர்,மேலும் சீதாவை பிரிந்து 12 வருடம் வனவாசம் செய்ய காரணமே டோபி மக்கள் தான் என்றும் வரலாறு உள்ளது

டோபி மக்கள் தங்கள் முன்னோடி கடவுளாக முனிவர் நாரதரை மட்டுமே வணங்கி வந்தனர்,கிருஷ்ணர்க்கும் பரீத் மக்களுக்கும் இடையே நடந்த சில கருத்துவேறுபாட்டால் கிருஷ்ணர் கூட இம்மக்களுக்கு சாபம் கொடுத்ததாக வரலாறு கூறப்படுகிறது, டோபி மக்கள் கடவுள் ராமரிடம் சீதையை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் வாதிட்டனர்,ஆனால் ராமர் சீதையை ஏற்றுக்கொண்டதும் அதனால் இம்மக்கள் தங்களை ராமரின் குலத்தை விட மேல் நோக்கிய குலமாகவே தங்களை பார்க்கின்றனர்

கடவுள் ராமர் சீதையின் இந்த வரலாற்றில் டோபி மக்களின் பங்களிப்பு பற்றிய வரலாறுகளை பெரும்பாலான மக்கள் ஏற்றுகொள்வது இல்லை, காரணம் பரீத் மக்களின் தாழ்வான செயல் மற்றும் தாழ்வான தொழிலே இருப்பினும் டோபி மக்கள் தங்களை பிராமணர்களுக்கு அடுத்து தங்களின் குலம் உயர்ந்தது என எண்ணுகிறார்கள்,மேலும் டோபி மக்கள் தங்களுடன் நாவிதர் (barber),குலாலா (potter) போன்ற மக்களையும் இணைத்து கொன்டுள்ளனர்.[4]

மக்கள் தொகை[தொகு]

ஆந்திரா[தொகு]

ஆந்திராவில், இவர்களை ராஜாகர்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 12% ஆகும்.[5]

பீகார்[தொகு]

பீகாரில் உள்ள தோபி சமூகம் மொத்த மக்கள் தொகையில் 6% ஆகும். இவர்கள் பூர்ணியா மற்றும் கிழக்கு சம்பாரண் மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர். பீகாரில் உள்ள தோபி சமூகம் பட்டியல் சாதி பிரிவில் உள்ளது.[6]

அரியானா[தொகு]

அரியானாவின் தோபிகள் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலிருந்து வந்தவர்களாக கருதப்படுகிறது. இவர்கள் மாநிலம் முழுவதும் பரவலாக வாழுகின்றனர். மற்ற இந்து சமூகங்களைப் போலவே, இவர்களும் கோத்திரங்கள் என்று அழைக்கப்படும் குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கிய தொழில் துணி துவைத்தல் மற்றும் உலர்த்துதல் ஆகும். சிறிய எண்ணிக்கையிலான தோபி குறுவிவசாயிகளாகவும் உள்ளனர். இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.[2]

கருநாடகம்[தொகு]

கருநாடகாவில் உள்ள இந்து தோபிகள் மடிவாலா என்று அழைக்கப்படுகிறார்கள்.[7] இவர்கள் தாவனகரே, சித்ரதுர்கா, ரைச்சூர் மற்றும் சீமக்கா மாவட்டங்களில் அடர்த்தியாக வாழுகின்றனர். இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராட்டிரம்[தொகு]

மகாராட்டிராவில் தோபிகள் மாநிலம் முழுவதும் காணப்படுகின்றனர். மேலும் இவர்களை பரித் என்றும் அழைக்கப்படுகின்றன. இவர்கள் முதலில் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக சௌகான் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்குள் மராத்தியும், வெளியாட்களுடன் இந்தியும் பேசுகிறார்கள்.[3]

ஒடிசா[தொகு]

இவர்கள் கிழக்கு ஒடிசாவில் (கட்டக், பூரி, பாலேசுவர், கஞ்சாம்) கணிசமான மக்கள் தொகையையும் மற்றும் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் ஒரு சிறிய மக்கள் தொகையும் கொண்டுள்ளனர்.[8]

தமிழகம்[தொகு]

தமிழகத்தில் தோபிகளை வண்ணார் என்று அழைக்கிறார்கள்.[9]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert Vane Russell (ed.). The Tribes and Castes of the Central Provinces of India. Made in the united states of America.
  2. 2.0 2.1 People of India Haryana Volume XXIII edited by M.L Sharma and A.K Bhatia pages 149 to 153
  3. 3.0 3.1 People of India Maharshtra Volume XXX Part One edited by B.V Bhanu, B.R Bhatnagar, D.K Bose, V.S Kulkarni and J Sreenath pages 523-528
  4. Suresh Kokate, ed. (2007). The Social and the Symbolic. SAGE Publication. p. 295,310. சத்திரிய மராட்டிய பரீத்
  5. List of OBCs in Andhra Pradesh
  6. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_bihar.pdf
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-15. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  8. http://www.indiankanoon.org/doc/1766850/
  9. "Archived copy". Archived from the original on 11 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோபி&oldid=3559752" இலிருந்து மீள்விக்கப்பட்டது