குலாலர்
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்காணா, கருநாடகா மற்றும் கேரளா | |
| மொழி(கள்) | |
| தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் | |
| சமயங்கள் | |
| இந்து | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| வேளார், உடையார், செட்டியார், குயவர் |
குலாலா (Kulala) தெலுங்கை தாய்மொழியாக கொண்டு வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். குயவர் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்க்குடியினர், இரண்டு சமூகங்களும் ஒரே குல தொழிலை மேற்கொள்கிறார்கள். மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான கடவுள் சிலை, மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குலாலர் வடிவமைக்கிறார்.
குலாலா, குயவர், குலாளா குலாள், கோலப்பர், வேளார், சேரமா, செட்டியார், பூசாரி, பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, தெலுங்கு மானுடை, மண்உடையார், உடையார், ஓசிரையர், சோலியர், மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளாலும், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குலாலர், அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன.[சான்று தேவை] குலாலர் மட்பாண்டத் தயாரிப்போடு அவற்றைப் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வணிகத்திலும் ஈடுபட்டார்கள். சங்க, புராண இலக்கியங்களில், கலம்செய்கேரி, மண்ணுடையார், மண்ணீட்டாளர், மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, வேட்கோவர் என்றெல்லாம் தொழில்முறையாக அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் கோயில் பணியாளர்களாக, பாதுகாவலர்களாக பூசகர் மரபினராக இருந்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.[சான்று தேவை]
இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் குலாலர்கள் 39 லட்சத்திற்கும் மேலானோர் வசிக்கின்றனர்.[1][2][3]
சொற்பிறப்பியல்
குலாலர்கள் என்பவர்கள், பிரம்மாவின் மகனான குலாலனின் மூன்று மகன்களின் சந்ததியினர். குலாலனை தினமும் படைக்கவும், அழிக்கவும் அனுமதிக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்ததால், பிரம்மா அவரை ஒரு குயவராக மாற்றினார்.[4]
சமுதாயச் சிறப்புகள்
- 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் என்பவர் குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[5][6][7] 1930களில் இந்த மக்களின் நலத்தை முன்னேற்ற குலாலமித்திரன்[8] என்னும் இதழ் வெளிவந்தது.
பிரிவுகள்
தமிழ்நாடு
தென் மற்றும் மேற்குத் தமிழகத்தில் வசிக்கும் தமிழ் பேசும் குலாலர்கள், வேளார் மற்றும் உடையார் ஆகிய பட்டங்களைப் பயன்படுத்துகின்றனர்.[9][10]
தென் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் குலாலர்கள், 'செட்டியார்' (தெலுங்கு செட்டியார் என்றும் அழைக்கப்படுபவர்கள்) என்ற பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் தென் தமிழகப் பகுதிக்குச் சமீப காலத்தில் குடியேறியவர்கள் ஆவர்.
ஆந்திரப் பிரதேசம்
இவர்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள், மேலும் குலாலா, கும்மரா மற்றும் மூலய சாலிவாகனா என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[11]
கருநாடகம்
கருநாடகாவில் இவர்கள் துளு மற்றும் கன்னட மொழிகளைப் பேசுகின்றனர்; மேலும் கும்பாரா, மூல்யா, குலால் மற்றும் பங்கேரா ஆகிய பெயர்களாலும் அறியப்படுகின்றனர்.[12][13] இவர்களின் பெயருடன் இணைக்கப்படும் முறையான மரியாதைக்குரிய பின்னொட்டு 'செட்டி' (Setti) ஆகும். இவர்கள் தங்கள் வம்சாவளியைச் சாலிவாகனரிடமிருந்து பெறுகின்றனர்.[14] கும்பாராக்களிடையே மூன்று முக்கிய உட்பிரிவுகள் உள்ளன: தெலுங்கு கும்பாராக்கள் (இவர்கள் 'சஜ்ஜன கும்பாராக்கள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்), கன்னட கும்பாராக்கள் மற்றும் லிங்காயத் கும்பாராக்கள். 'லிங்கம்' அணியும் மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நடைமுறையில் லிங்காயத்துகளாகவே கருதப்படுகின்றனர்; இவர்கள் அந்தச் சமூகத்திற்கே உரிய சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர், அத்துடன் 'ஜங்கமா' (Jangama) ஒருவரைத் தங்கள் குருவாகக் கொண்டுள்ளனர்.[15]
கேரளம்
கேரளாவில், குலாலர் சமூகத்தினர் கும்பாரர், குசவன், வேளான், நாயர், மூல்யா வேளார் என அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] இதில் கும்பாரா என்பவர்கள் கும்பார மொழி பேசுகின்றனர். கேரளத்தில், நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழியாகும். இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் துளு,என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கலாச்சாரம்
இவர்கள் சைவ மற்றும் வைணவ சமயங்களைப் பின்பற்றுகின்றனர். இவர்களது சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் கம்மவார் அல்லது வெள்ளாளர் சமூகத்தினரின் முறைகளை ஒத்திருக்கின்றன. இவர்களில் சிலர் தங்கள் சொந்தச் சாதியைச் சேர்ந்த பூசாரிகளைக் கொண்டுள்ளனர்; வேறு சிலர் பிராமணர்களைப் பூசாரிகளாகப் பணியமர்த்துகின்றனர். இவர்கள் பூணூல் அணிகின்றனர் மற்றும் உயர்ந்த சமூக அந்தஸ்தைக் கோருகின்றனர்.[16] They wear sacred thread[17][18]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009". [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மண்கலைஞர்கள்". Archived from the original on 2016-03-04. Retrieved 2023-02-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2023-02-26.
- ↑ Inglis, Stephen Robert (1984). "Creators and Consecrators: A Potter Community of South India".
- ↑ கி. வா. ஜகந்நாதன், ed. (1980). விடைகள் ஆயிரம். Vol. 20. அமுத நிலையம். p. 169.
624.திருநீலகண்ட நாயனர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ஆகிய இருவரும் ஒருவரா? இருவரும் வேறு.திருநீலகண்டநாயனர் குலால வம்சத்தைச் சேர்ந்தவர், திருநீலகண்டயாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்;
- ↑ கி. வா. ஜகன்னாதன் (1941). கீழாம்பூர். ஆர்.நாராயணஸ்வாமி (ed.). கலைமகள் இதழ். Vol. 20. p. 78:.
சிதம்பரத்தில் குலாளர் குலத்தில் கிருநீலகண்டரென்பவர் உதித்து இளமை தொடங்கியே சிவபக்திச் செல்வமுடையவராகி விளங்கினர்
{{cite book}}: Missing|author1=(help); no-break space character in|quote=at position 75 (help)CS1 maint: extra punctuation (link) - ↑ புலவர் செ. இராசு, ed. (1991). கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். அரை காலிகோ. p. 184.
திருநீலகண்டர் குலாளர் சமூகத்தில் பிறந்தவர் .கிபி . 15ஆம் நூற்றாண்டில் தீர்த்தகிரி மலையில் குலாளர் குலப் பெருமக்களால் திருநீலகண்டர் பெயரில் திருமடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.இது 56 தேசத்திலும் உள்ள திருநீலகண்டர்கள் ( குலாளர்கள் ) பலர் சேர்ந்து ஏற்படுத்திய மடம் .மடத்தில் திருநீலகண்டரையும் , இராமலிங்க பண்டாரத்தையும் பிரதிட்டை செய்தனர் .
{{cite book}}: line feed character in|quote=at position 14 (help) - ↑ சுப்பிரமணிய ராமசாமி புலவர், ed. (1961). நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1. p. 166.
குலாலமித்திரன் 1931
- ↑ Inglis, Stephen Robert (1984). "Creators and Consecrators: A Potter Community of South India".
- ↑ http://piketty.pse.ens.fr › dataPDFCastes and tribes of southern India - ENS [not specific enough to verify]
- ↑ "National Commission for Backward Classes".
- ↑ "National Commission for Backward Classes".
- ↑ "The Mysore Tribes and Castes, Volume 4 by L. Krishna Anantha Krishna Iyer (Diwan Bahadur)". 1931. p. 4.
- ↑ "The Mysore Tribes and Castes, Volume 4 by L. Krishna Anantha Krishna Iyer (Diwan Bahadur)". 1931. p. 5.
- ↑ "The Mysore Tribes and Castes, Volume 4 by L. Krishna Anantha Krishna Iyer (Diwan Bahadur)". 1931. p. 6.
- ↑ "Tamil studies, or essays on the history of the Tamil people, language, religion, and literature". 1914.
- ↑ Inglis, Stephen Robert (1984). "Creators and Consecrators: A Potter Community of South India by Stephen Robert Inglis". p. 52.
- ↑ "The Mysore Tribes and Castes, Volume 4 by L. Krishna Anantha Krishna Iyer (Diwan Bahadur)". 1931. p. 15.
வெளி இணைப்புகள்
- டெல்லி தமிழ் குலாலா சங்க இணைய தளம் பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம்
- குலாலர் இணைய தளம்